Egg kurma recipe in Tamil / Muttai kurma seimurai Tamil – How to make egg kurma Tamil

Egg kurma recipe in Tamil / Muttai kurma seimurai Tamil – How to make egg kurma Tamil

Description :

இந்த தமிழ் வீடியோ மூலம் முட்டை குருமா எப்படி செய்வது என்று அறிந்து கொள்ளலாம்.
This egg kurma is prepared with hard boiled eggs which is a delicious side dish curry recipe for chapati and bread
THAMIL VIRUNDHU FACEBOOK – https://www.facebook.com/pages/Thamilvirundhu/413999238736366
VISIT MY SITE – http://www.thamilvirundhu.com/

தேவையான பொருள்கள் – english text link – http://www.thamilvirundhu.com/?p=1740
வேகவைத்த முட்டை – 5
வேக வைக்காத முட்டை – 1
பெரிய வெங்காயம் நறுக்கியது – 1
வெள்ளைப் பூண்டு – 10 பல்
தக்காளி – 1

தாளிப்பதற்கு தேவையான பொருள்கள்
கடுகு – 1 tsp
சீரகம் – 1 tsp
கறிவேப்பிலை

அரைப்பதற்கு தேவையான பொருள்கள்
தேங்காய் – 1/4 கப்
பாதாம் பருப்பு – 10 to 12
சோம்பு – 1 tsp
மிளகு – 1 tsp
பச்சை மிளகாய் – 2
ஏலக்காய் – 1
பட்டை – சிறிது
இஞ்சி பூண்டு விழுது – 1/2 tsp
மல்லி தூள் – 1/2 tsp

செய்முறை
1. பாதாம் பருப்பு, அவித்த முட்டை ரெடி செய்து கொள்ளவும்.
2. கடாயில் சிறிது எண்ணெய் சூடாக்கி கொள்ளவும். இப்பொழுது அரைப்பதற்கு தேவையான பொருள்கள் எல்லாவற்றையும் போட்டு வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
3. இன்னொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். வெடித்து வந்தவுடன் வெங்காயம், வெள்ளைப் பூண்டு, கறிவேப்பிலை போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும். பின் தக்காளி போட்டு நன்றாக மசியும் வரை வதக்கவும்.
4. இப்பொழுது அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும். வேண்டிய அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
5. கொதித்தாகி விட்டதா ? கொதிக்கும் குருமாவில் அவித்த முட்டை சேர்த்து, அவிக்காத முட்டையை மெதுவாக ஊற்றவும்.
6. நல்லவேளை !!! நீங்கள் இன்னும் குருமாவை கிண்டவில்லை. அவிக்காத முட்டையின் மஞ்சள் வேகும் வரை கரண்டி போட்டு கிண்டாதீர்கள். கிண்டிவிட்டால் அதிகமான முட்டை வாடை குருமாவில் சேர்ந்து விடும்.
7. சிறிது நேரம் கொதிக்க விட்டு மல்லி போட்டு இறக்கி……s s s s s …… அப்பாட ……….. சாப்பிடலாம். All contents in this video are copyrighted THATTAI SNACK RECIPE LINK – https://www.youtube.com/watch?v=FRSGnk418J0 Google plus – https://plus.google.com/u/0/+thamilvirundhu Thamil Virundhu – Tamil Recipe Videos


Rated 5.0

Date Published 2014-08-01 08:05:27Z
Likes 19
Views 7575
Duration 0:04:41

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..