Thengai Mangai Pattani Sundal(தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்)Sivakasi Samayal / Recipe – 48
Description :
The perfect and healthy snack for a rainy day….
Amma’s blog…..https://thinandhorumkrishnarudan.wordpress.com/
Date Published | 2013-08-07 15:59:18Z |
Likes | 51 |
Views | 17590 |
Duration | 0:06:31 |
sundal superma
Amma, am your fan.. have tried lot of recipes from your videos.. am from virudhunagar.. I love your cooking…. your presentation and way of speaking looks like my amma…. so I like you so much… 🙂 Thank you.. keep posting lot of recipes…
ஆச்சி, நமஸ்காரம். நான் புதுக்கோட்டையில் படிச்ச காலத்துல ஒரு செட்டியார் அன்பர், அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட அன்பு நேயர், நெற்றியில் ஒளிரும் நீற்றுக் குறியுடனும், மிளிரும் புன்னகை வெற்றிலையால் சிவந்த அதரங்களில் தெறித்து நிற்க, இந்த தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் மட்டுமே விற்று வந்தார்.
ஒரு பெரிய்ய, மிகப் பெரிய்ய, மினு மினுக்கும் பித்தளை அண்டா முழுக்க இந்த சுண்டல் மட்டும் தான். அந்த அண்டாவின் புறங்களில் நீற்றுப் பட்டைகள் சந்தன குங்குமத்துடன் விளங்கும். பார்க்கவே ஆனந்தமாக இருக்கும்.
Single Product, Exclusive Brand and ardently patronizing customers who were absolutely addicted to his Sundal!
பகல் 12 மணி முதல் சாயந்திரம் 5 மணி வரை அல்லது தீரும் வரை வியாபாரம். பல நாட்களில் 3 மணிக்கே தீர்ந்து விடும். இந்த உலகத்திலேயே அது போல் சுவை இல்லை. தேங்காய் மாங்காய் துண்டுகள் நிறைந்து இருக்கும். ஆனால் அன்றைய நாட்களில் கேரட் தூவும் வழக்கம் இல்லை. அது பின்னாளில் வந்த வழக்கம். இந்த சுண்டல் தேவாமிர்தமாக இருக்கும். TELC ஸ்கூல் வாசலுக்கு சரியாக ஒரு மணிக்கு வருவார். தொன்னையில் சிறு பனை ஓலை ஸ்பூன் வைத்துத் தருவார். ஒரு தொன்னை ஐம்பது காசுகள் மட்டுமே. (In the Late Seventies-Year 1970s).
நான் எப்போதும் மூன்று தொன்னைகள் வாங்குவேன். இரண்டிலேயே வயிறு நிரம்பிவிடும். வீட்டிலிருந்து கொண்டு வந்த மதிய சாப்பாடு தினமும் யாருக்காவது தத்தமாகிவிடும். இன்று அவர் இல்லை. அவர் மகன் தொடர்கிறார் என்று கேள்வி.
ஆனால் அவரது சுண்டலில் மசாலா சேர்க்கப்பட்டு, சொக்குப் பொடி போட்டது போல் உயிரையே சுண்டியிழுத்து மண மணக்கும். அந்த அன்பர், வெள்ளைப் பட்டாணி கொண்டு மட்டுமே இந்த சுண்டலைச் செய்தார்.
ஒரு முறை என் அத்தை மகனுடன் அவன் பூஜை செய்யும் கோவில் ஒன்றுக்குச் சென்ற பொது, சிறந்த சிவனடியார்களான சில நகரத்தார்கள், நெய்வேத்யமாக இந்த வகை மசாலா சுண்டல் கொண்டு வந்து இருந்தனர்.
அதே வாசனை. அதே சுண்டல். என் மனம் துள்ளிக் குதித்தது. ஆனால் எனக்குச் சிறிது தாருங்கள் என்று கேட்க வெட்கம். கேட்டிருந்தால் மிகவும் மகிழ்ச்சியுடன் அள்ளி அள்ளிக் கொடுத்திருப்பார்கள்.
இது 2007 இல் நிகழ்ந்தது. அன்று அவர்களிடம் செய்முறை தெரிந்து கொள்ள மிகவும் விருப்பம். இருந்த போதும் அதைக் கேட்கும் தைரியம் எனக்கு வரவில்லை. பக்கத்தில் என் அத்தை மகன் வேறு குடுமித் தலையுடன். மிகச் சிறந்த மனிதன்(ர்). நானோ, நெறிகளைத் துறந்த ஒரு கீழ்மகன். இடமோ கோவில். என் செய்ய.
இந்த ரெஸிப்பியை பல வருடங்களாகத் தேடிக் கொண்டு இருக்கிறேன்.
நான் உங்களைப் பணிந்து விண்ணப்பிப்பது ஒன்றே ஒன்று மட்டும் தான். இந்த தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலை மசாலா சேர்த்து மணக்க மணக்கச் செய்வது எப்படி. அருள் கூர்ந்து பதில் அளிக்க வேண்டுகிறேன். லக்ஷ்மீகரமாக உள்ள தங்களின் பேச்சு மிகவும் அருமை. மிகவும் நன்றி. அன்பன் சுப்பு.
Thankz …amma