பன்னீர் நெய் ரோஸ்ட் | Paneer Ghee Roast In Tamil

பன்னீர் நெய் ரோஸ்ட் | Paneer Ghee Roast In Tamil

Description :

பன்னீர் நெய் ரோஸ்ட் | Paneer Ghee Roast In Tamil

#பன்னீர்நெய்ரோஸ்ட் #PaneerGheeRoast #VegGravy #VegRecipes #PaneerRecipes #VegSidedish

தேவையான பொருட்கள்

பன்னீர் ஊறவைக்க

பன்னீர் – 200 கிராம்
உப்பு – 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 பழம்
தயிர் -1/2 கப்

மசாலா விழுது செய்ய

தனியா – 4 தேக்கரண்டி
முழு மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி சிவப்பு மிளகாய் – 5
காய்ந்த சிவப்பு மிளகாய் – 2
பூண்டு – 3 பற்கள் நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
புளி – 1 சிறிய துண்டு
நெய் – 1 தேக்கரண்டி

நெய் ரோஸ்ட் செய்ய

நெய் – 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
வெல்லம் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்முறை

முதலில் பன்னீரை துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இதில் உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கிளறி 30 நிமிடங்களுக்கு ஊற விடவும். மசாலா தூள் அரைக்க ஒரு கடாயில் நெய் ஊற்றி, அதில் தனியா, முழு மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம் சேர்த்த சற்று வறுத்த பின், காஷ்மீரி மிளகாய், காய்ந்த சிவப்பு மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் சிறிதளவு புளி சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும். மசாலா ஆறிய பின் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும். அதே கடாயில் நெய் ஊற்றி பெரிய வெங்காயம் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கிய பின் மஞ்சள் தூள் மற்றும் அரைத்த மசாலா விழுது சேர்த்து வதக்கவும். மசாலா திரண்டு வந்த பின் அதில் உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து கிளறவும். அடுத்து இதில் ஊறவைத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும். மசாலாவில் உள்ள நீர் வற்றி திரண்டு வரும் வரை வதக்கவும்.
பன்னீர் நெய் ரோஸ்ட் தயார்.


Rated 4.93

Date Published 2020-01-23 05:00:05Z
Likes 470
Views 15691
Duration 0:04:23

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Tried just now ❣️❣️❣️❣️
    Got everyone's appreciation ❤❤❤❤❤

    DIVYA RAVICHANDRAN January 26, 2020 4:40 pm Reply
  • Definitely I'll try this

    narmi's kitchen January 24, 2020 6:58 am Reply
  • Mam home cooking Tamil book epadi vanga vendum

    Hannah A January 24, 2020 6:24 am Reply
  • Healthy resipy

    prince and unacy her sissy January 23, 2020 2:45 pm Reply
  • I don't like sweet taste in dish so can we prepare this dish without that jaggery powder mam

    sakthi Uma January 23, 2020 11:34 am Reply
  • Look so nice

    Ravi Kumar January 23, 2020 11:01 am Reply
  • Super mam

    Radhika R January 23, 2020 8:26 am Reply
  • பஞ்சாப் தாபா… உணவு
    இனி எங்கள் வீட்டில் பன்னீர்…
    அறுசுவை..

    Amalesh kumar January 23, 2020 8:14 am Reply
  • Mam ur voice was different in English and tamil home cooking channels….

    ramesh lilvein January 23, 2020 6:22 am Reply
  • I love paneer mam and lovely super

    Babu Suganeya January 23, 2020 5:24 am Reply
  • This receip came in amazon food receipe section last month we tried at home it's good

    HAPPY LIFE January 23, 2020 5:08 am Reply
  • Yummy

    kani smily January 23, 2020 5:05 am Reply
  • 1st like mam

    Funtastic Samayal January 23, 2020 5:01 am Reply

Don't Miss! random posts ..