சுல்தானி தால் | Sultani Dal Recipe in Tamil

சுல்தானி தால் | Sultani Dal Recipe in Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

சுல்தானி தால் | Sultani Dal in Tamil

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – 1 கப்
உப்பு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
தண்ணீர் – 2 கப்
பால் – 1 கப்
தயிர் – 1/4 கப்
கிரீம் – 2 மேசைக்கரண்டி
கரி
நெய்
கொத்துமல்லி தழை

பருப்பு கடையல் செய்ய

நெய் – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு
இஞ்சி
பச்சை மிளகாய் – 1
காஷ்மீரி சிவப்பு மிளகாய் – 2
வெங்காயம் – 1
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

#SultaniDal #toordal #சுல்தானிதால்

செய்முறை
1. முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி அதை குக்கரில் சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஆறு விசில் வரும் வரை வேகவைக்கவும்
2. பருப்பு வெந்தவுடன் அதனுடன் பால் மற்றும் தயிர் சேர்த்து கலக்கிக்கொள்ளவும்
3. அடுத்து ஒரு கடாயில் நெய், சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், காஷ்மீரி மிளகாய், பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
4. இந்த கலவையை சமைத்த பருப்பில் பிரெஷ் கிரீம் உடன் சேர்த்து நன்கு கலக்கவும்
4. அடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிய கரி துண்டை பற்ற வைத்து அந்த கிண்ணத்தை பருப்பு கலவையில் வைத்து கரிக்கட்டையின் மேல் நெய் விட்டு ஒரு நிமிடம் மூடிவைக்கவும்
5. ஒரு நிமிடத்திற்கு பின்பு சுவையான சுல்தானி தால் தயார்


Rated 4.8

Date Published 2019-05-31 07:25:37Z
Likes 584
Views 32459
Duration 0:04:34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..