அட்டகாசமான மீன் ரெசிப்பீஸ் | Fish Recipes In Tamil | Seafood Recipes | @HomeCookingTamil

அட்டகாசமான மீன் ரெசிப்பீஸ் | Fish Recipes In Tamil | Seafood Recipes | @HomeCookingTamil

Description :

அட்டகாசமான மீன் ரெசிப்பீஸ் | Fish Recipes In Tamil | Seafood Recipes | @HomeCookingTamil

#fishrecipesintamil #vanjarammeenkulambu #chillifishrecipe #fishfryrecipeintamil

Chapters:
Promo – 00:00
Vanjaram Fish Curry – 00:24
Nethili Fish Fry – 04:50
Chilli Fish – 07:13
Steamed Fish – 12:16

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

வஞ்சரம் மீன் குழம்பு
தேவையான பொருட்கள்

மீனை ஊறவைக்க

வஞ்சரம் மீன் – 1 கிலோ
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி

வஞ்சரம் மீன் குழம்பு செய்ய

நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 30 நறுக்கியது
முழு சின்ன வெங்காயம் – 15
பூண்டு – 15 பற்கள்
பச்சை மிளகாய் – 3 கீறியது
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
தக்காளி – 4 நறுக்கியது
கல் உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
தனியா தூள் – 3 தேக்கரண்டி
கெட்டியான புளி கரைசல் – 1 கப்
தண்ணீர் – 2 கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை:
1. மீனில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
2. மண் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம் சேர்க்கவும்.
3. பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், முழு சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை 10 நிமிடம் வதக்கவும்.
4. பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
5. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. பிறகு கல் உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
7. கெட்டியான புளி கரைசல் சேர்த்து கலந்துவிட்டு, தண்ணீர் ஊட்டி கலந்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
8. பின்பு ஊறவைத்த மீன் துண்டுகளை சேர்க்கவும்.
9. பாத்திரத்தை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
10. கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
11. அட்டகாசமான வஞ்சரம் மீன் குழம்பு தயார்!

நெத்திலி மீன் வறுவல்
தேவையான பொருட்கள்

நெத்திலி மீன் – 8
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லித்தூள் -1/2 தேக்கரண்டி
கடலை மாவு- 1 தேக்கரண்டி
தேவையான அளவு உப்பு
மிளகு தூள்
தண்ணீர்
எண்ணெய்

செய்முறை:
1. முதலில் ஒரு மசாலா தயாரிக்க வேண்டும்
2. ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு, மிளகு தூள், கடலை மாவு, தண்ணீர் சேர்த்து கலக்கவும்
3. இந்த மசாலாவை நெத்திலி மீனின் இருபுறமும் தடவ வேண்டும்
4. ஒரு முப்பது நிமிடம் மீனை மசாலாவில் ஊற வைக்கவும்
5. அடுத்து கடாயில் எண்ணெய் சேர்த்து இந்த மசாலா தடவிய மீனை இரு புறமும் பொறிக்கவும்
6. சூடான மற்றும் சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார்.

சில்லி மீன்
தேவையான பொருட்கள்

மீனை ஊறவைக்க

கொடுவாமீன் – 1/2 கிலோ
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
முட்டை – 1
சோளமாவு – 3 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு

சில்லி மீன் செய்ய

எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பூண்டு – நறுக்கியது
இஞ்சி – நறுக்கியது
வெங்காயம் – 1 கப் பெரிதாக நறுக்கியது
குடைமிளகாய் – 1 பெரிதாக நறுக்கியது
வினிகர் – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 1/2 தேக்கரண்டி
சில்லி சாஸ் – 2 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் – 2 மேசைக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
வெங்காயத்தாள் வெங்காயம்
வெங்காயத்தாள் கீரை
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
பழுத்த சிவப்பு மிளகாய் நறுக்கியது

செய்முறை:
1. மீனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
2. அடுத்து மீனுடன், உப்பு, மிளகுதூள், மிளகாய் தூள், சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் ஊறவிடவும்.
3. பின்பு முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தனித்தனியே பிரித்து, வெள்ளை கருவை மீனுடன் சேர்த்து கலந்துகொள்ளவும்.
4. அதனுடன் சோளமாவையும் சேர்த்து நன்கு கலந்து சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் 3 நிமிடம் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
5. கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, இஞ்சி, பெரிதாக நறுக்கிய வெங்காயம்,
பெரிதாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
6. பிறகு வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்சப், உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.
7. அடுத்து வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
8. சிறிதளவு தண்ணீர் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறிவிடவும்.
9. பிறகு இதில் நறுக்கிய சிவப்பு மிளகாய், பொரித்த மீன் சேர்த்து நன்கு கலந்து, இறுதியாக சிறிது வெங்காயத்தாள் கீரை சேர்த்து இறக்கினால். அருமையான சில்லி மீன் தயார்.

ஸ்டீம்டு பிஷ்
தேவையான பொருட்கள்

கொடுவா மீன்
தேங்காய் துருவல் – 1/2 கப்
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பூண்டு நறுக்கியது
சீரகம் – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
பச்சை மிளகாய் – 5
கொத்தமல்லி இலை – 1 கப்
புதினா இலை – 1 கப்
எலுமிச்சைபழச்சாறு – 1 பழத்தின் சாறு
தண்ணீர்
வாழை இலை

Watch these special Fish Recipes from Home cooking tamil.Watch the video till the end for step by step guidance on all four special recipes.Try these and enjoy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-10-26 09:00:57
Likes 360
Views 22731
Duration 15:45

Article Categories:
Fish · Non-Vegetarian · Sea food · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..