6 சுவையான Trending Breakfast ரெசிப்பீஸ் | Easy Breakfast Recipes in Tamil | Tiffin Recipes

6 சுவையான Trending Breakfast ரெசிப்பீஸ் | Easy Breakfast Recipes in Tamil | Tiffin Recipes

Description :

6 சுவையான Trending Breakfast ரெசிப்பீஸ் | Easy Breakfast Recipes in Tamil | Tiffin Recipes

#breakfastrecipes #tiffinrecipes #easybreakfastrecipes #neerdosa #kidsbreakfast #breakfastideas #upmarecipe #avalupma #wheatdosaintamil #chilliidliintamil #neerdosaintamil #homecookingtamil

மீதமான ரைஸ் சப்பாத்தி
தேவையான பொருட்கள்

மீதமான சாதம் – 1 கப்
கோதுமை மாவு – 1 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
எண்ணெய்
நெய்

செய்முறை:
1. ஒரு மிக்சர் ஜாரில் மீதமுள்ள சாதம், உப்பு மற்றும் கோதுமை மாவை சேர்த்து அரைக்கவும்.
2. அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கோதுமை மாவு, எண்ணெய் சேர்த்து பிசையவும்.
3. மாவு தயாரானதும் அதன் மீது எண்ணெய் தடவி பாத்திரத்தை மூடி மாவை 30 நிமிடம் ஊறவைக்கவும்.
4. பிறகு மாவை, சிறு உருண்டைகளாக பிரித்து ஒரு சிறு உருண்டையை சப்பாத்தி கல்லில் வைத்து தேய்க்கவும்.
5. இப்போது ஒரு பானை சூடாக்கி தேய்த்த சப்பாத்தியை வைக்கவும்.
6. சப்பாத்தியை சிறிது நெய் தடவி இருபுறமும் வேகவைக்கவும்.
7. சுவையான மீதமான ரைஸ் சப்பாத்தி தயார்.

சில்லி இட்லி | chilli idli

தயாரிப்பு நேரம் – 15 நிமிடங்கள்
சமையல் நேரம் – 10 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

இட்லி – 4
எண்ணெய்
பொடியாக நறுக்கிய பூண்டு
பொடியாக நறுக்கிய இஞ்சி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
நறுக்கிய குடை மிளகாய் – 1/2
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் – 2 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் – 3 மேசைக்கரண்டி
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு மிளகு தூள்
வெங்காயத்தாள் பச்சை பாகம்

சிவப்பு அவல் உப்மா
தேவையான பொருட்கள்

சிவப்பு அவல் – 1 கப்
தண்ணீர்
நெய் – 1 1/2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
இஞ்சி – 1 சிறிய துண்டு நறுக்கியது
கறிவேப்பில்லை
கேரட் – 1 நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
பச்சை பட்டாணி – 1/2 கப் வேகவைத்தது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
துருவிய தேங்காய்
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை
1. பாத்திரத்தில் சிவப்பு அவல் போட்டு, முழுகும் வரை தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வைக்கவும்.
2. அகல கடாயில் நெய் ஊற்றி, இதில் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் போட்டு கிளறவும்.
3. கடுகு வெடித்ததும், இதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும், இதில் கேரட் சேர்க்கவும்.
5. உப்மா’விற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
6. இதில் வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து கிளறவும்.
7. அடுத்து மஞ்சள் தூள், மற்றும் ஊறவைத்த அவல் சேர்க்கவும்.
8. அவலில் உள்ள ஈரம் போகும் வரை கிளறவும்.
9. அடுத்து துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்கவும்.
10. சுவையான சிவப்பு அவல் உப்மா தயார்.

நீர் தோசை | Neer Dosai in Tamil

தேவையான பொருட்கள்

அரிசி – 1 கப்
உப்பு
எண்ணெய்
தண்ணீர்

செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் அரிசியை ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைத்துக்கொள்ளவும்.
3. அரைத்த பின்பு தண்ணீர் சேர்த்து மோர் பத நிலை அடையும் வரை நீர்க்க செய்யவும்.
4. அடுத்து ஒரு தோசை சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடேற்றிய பின்பு கரைத்த மாவை ஊற்றி ஒரு நிமிடம் மூடி வேகவைக்கவும்.
5. எளிமையான மற்றும் மிருதுவான நீர் தோசை தயார்.

கோதுமை ஊத்தப்பம்
தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
கறிவேப்பில்லை நறுக்கியது
வெங்காயம் – 2 நறுக்கியது
உப்பு
கோதுமை மாவு – 1 1/2 கப்
கெட்டி மோர் – 1 கப்
தண்ணீர்
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை
1. கடாயில் எண்ணெய், கடுகு, சீரகம் போடவும்.
2. கடுகு பொரிந்ததும், இதில் இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
3. தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயத்தை வதக்கவும்.
4. வெங்காயம் பாதி வதங்கியதும், அடுப்பை அணைத்து விட்டு ஆறவிடவும்.
5. பாத்திரத்தில், கோதுமை மாவு மற்றும் கெட்டி மோர் சேர்த்தது கலக்கவும்.
6. தோசை மாவு பதத்திற்கு கிண்டவும். மாவிற்கு தேவையான உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிண்டவும்.
7. வதக்கிய வெங்காய கலவையை போட்டு கிளறி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
8. 1 மணி நேரம் கழித்து, தாவா’வை சூடு செய்து, மாவை ஊற்றவும்.
9. எண்ணெய் ஊற்றி சுடவும்
10. சுவையான கோதுமை ஊத்தப்பம் தயார்.

திணை உப்புமா | Millet Upma in Tamil

தேவையான பொருட்கள்

திணை – 1/2 கப்
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/ 2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் -2
இஞ்சி – 1 துண்டு
கறிவேப்பிலை

செய்முறை
1. திணையை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்
2. கடாயில் நெய் ஊற்றி, இதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் போடவும்.
3. கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், இதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
5. 5 நிமிடம் கழித்து, இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. இதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
7. இதில் தண்ணீர் ஊற்றி, கடாயை மூடி 5 நிமிடம் காய்கறிகளை வேகவைக்கவும்.
8. அடுத்து இதில் தண்ணீரை வடித்த திணையை சேர்க்கவும்.
9. கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் வேகவைக்கவும்.
10. திணை உப்புமா தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop


Rated 5.00

Date Published 2023-02-03 09:00:05
Likes 1696
Views 276642
Duration 18:3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..