ஹனி கார்லிக் காலிஃபிளவர் | Honey Garlic Cauliflower Recipes In Tamil #shorts #honeygarliccauliflower
Description :
ஹனி கார்லிக் காலிஃபிளவர் | Honey Garlic Cauliflower Recipes In Tamil #shorts #honeygarliccauliflower
#honeygarliccauliflower #startersrecipes #vegstartersrecipes #cauliflowerrecipes
ஹனி கார்லிக் காலிஃபிளவர்
தேவையான பொருட்கள்
மைதா – 1/2 கப்
சோளமாவு – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3QP0s5t)
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
உப்பு – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகு தூள் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
எண்ணெய் (Buy: https://amzn.to/3KxgtsM)
காலிஃபிளவர் – 1
பூண்டு – 2 மேசைக்கரண்டி நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/30Nrv4W)
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oq9bKi)
வினிகர் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oq9bKi)
டொமட்டோ கெட்சப் – 3 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/31aRpQ7)
சோளமாவு கலவை
தேன் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3ONTmwu)
வெங்காயத்தாள் நறுக்கியது
செய்முறை
1. காலிஃபிளவரை நறுக்கி சூடு தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வைக்கவும்.
2. பின்பு வடிகட்டி நன்கு ஆறவிடவும்.
3. பாத்திரத்தில் மைதா, சோளமாவு, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
4. பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை கரைத்து கொள்ளவும்.
5. பிறகு காலிஃபிளவரை மாவில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
6. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காலிஃபிளவரை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
7. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
8. பின்பு மிளகாய் தூள், மிளகு தூள், சில்லி பிளேக்ஸ் சேர்த்து கலந்துவிடவும்.
9. பிறகு சோயா சாஸ், வினிகர், டொமட்டோ கெட்சப் சேர்த்து கலந்து பின்பு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும் .
10. பின்பு சோளமாவு கலவையை சேர்த்து கலந்துவிடவும்.
11. பொரித்த காலிஃபிளவரை சேர்த்து கலந்துவிடவும்.
12. கடைசியாக தேன், வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கவும்.
13. ஹனி கார்லிக் காலிஃபிளவர் தயார்.
Date Published | 2024-05-21 03:30:02 |
Likes | 254 |
Views | 8212 |
Duration | 1: |