விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Vinayagar Chaturthi Special Recipes In Tamil
Description :
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Vinayagar Chaturthi Special Recipes In Tamil
#vinayakarchaturthirecipes #ganeshchaturthispecialrecipe #kolukattairecipeintamil
Chapters:
Promo – 00:00
Kozhukattai – 00:18
Uppu Kozhukattai – 04:54
Medhu Vada – 09:53
Rice Payasam – 13:21
Our Other Recipes
சேமியா கேசரி: https://youtu.be/jk6ccoTyxME
தேங்காய் சாதம்: https://youtu.be/C7vgDPKgwd4
காராமணி சுண்டல் /தட்டை பயிறு சுண்டல்: https://youtu.be/vpYvDCr-f-0
கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
வெல்லம் – 100 கிராம்
துருவிய தேங்காய் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
கொழுக்கட்டை மாவு – 1 கப்
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு
நெய்
தண்ணீர்
செய்முறை
1. பூரணம் செய்ய ஒரு சாஸ் பானில் தண்ணீர் ஊற்றி, வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க விடவும்.
2. வெல்லம் கரைந்த உடன் 2 நிமிடம் கொதிக்க விடவும்.
3. அடுத்து ஒரு கடாயில் நெய் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
4. பின்பு கரைத்த வெல்லத்தை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். பிறகு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
5. கொழுக்கட்டை செய்ய ஒரு பாத்திரத்தில் கொழுக்கட்டை மாவு, உப்பு, நல்லெண்ணெய் மற்றும் சிறிது சிறிதாக சுடு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
6. மாவை 2 நிமிடம் பிசையவும். மாவை 10 நிமிடம் மூடி வைக்கவும்.
7. கொழுக்கட்டை அச்சில் எண்ணெய் தடவி, பிசைந்த மாவை ஒரு பக்கம் வைத்து அழுத்தி விடவும். பின்பு பூரணத்தை வைத்து அழுத்தவும்.
8. அச்சின் மறுபக்கம் பிசைந்த மாவை வைத்து அழுத்தி அச்சை மூடவும். அச்சின் பின்புறம் பூரணம் மற்றும் பிசைந்த மாவை வைத்து அழுத்தி விடவும்.
9. இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி செய்த கொழுக்கட்டையை வைத்து 8 நிமிடம் வேகவிடவும்.
10. சுவையான கொழுக்கட்டை தயார்.
உப்பு கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
பூர்ணம் செய்ய
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
துவரம் பருப்பு – 2 மேசைக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை
கொழுக்கட்டை செய்ய
இடியாப்பம்/கொழுக்கட்டை மாவு – 1 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
வெந்நீர்
பூர்ணம்
வாழை இலை
செய்முறை
பூர்ணம் செய்ய
1. உளுத்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பு, இரண்டையும் நன்கு கழுவி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஒரு மணி நேரம் கழித்து, தண்ணீரை வடிகட்டி, மிக்ஸியில் போட்டு, கொர கொரப்பாக அரைக்கவும்.
3. அரைத்த விழுதை, சிறிய வடை போல் தட்டி, ஆவியில், 15 நிமிடம் வேகவைக்கவும்.
4. வெந்த பருப்பு கலவையை, நன்கு ஆறவிட்டு, உதிர்த்து வைக்கவும்.
5. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பில்லை மற்றும் உதிர்த்து வைத்த பருப்பு கலவையை போட்டு 3 நிமிடம் கிளறவும்
6. பூர்ணம் தயார்.
கொழுக்கட்டை செய்ய
1. பாத்திரத்தில், இடியாப்பம் மாவு போட்டு, இதில் உப்பு, எண்ணெய் மற்றும் வெந்நீர் ஊற்றி கிளறவும்.
2. பின் கையால் பிசைந்து வைக்கவும்.
3. வாழையிலையில் சிறிது எண்ணெய் தடவி, பிசைந்த மாவின், சிறு உருண்டை வைத்து தட்டவும்.
4. இதன் நடுவில், செய்த பூர்ணம் வைக்கவும்.
5. வாழையிலையை மடித்து, கொழுக்கட்டைகளை மூடவும்.
6. பின் இட்லி குக்கர்’ரில் வைத்து 15 நிமிடம் வேகவைக்கவும்.
7. சுவையான உப்பு கொழுக்கட்டை தயார்.
மெது வடை
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு – 1 கப்
தண்ணீர்
உப்பு – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை
எண்ணெய்
செய்முறை:
1. மெது வடை செய்ய உளுத்தம் பருப்பை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்
2. ஊறவைத்த உளுத்தம் பருப்பை மிக்ஸியில் சேர்த்து படிப்படியாக தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்
3. அரைத்த மாவை பிரிட்ஜ்ல் வைத்து இரண்டு மணி நேரம் குளிர்விக்கவும்
4. இரண்டு மணி நேரம் கழித்து இதில் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்
5. மாவை நன்கு கலந்த பின்பு வாழை இலலையில் மாவை வைத்து தண்ணீர் தொட்டு தட்டிவைக்கவும்
6. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு தட்டிய மாவை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்
7. மிருதுவான மற்றும் மிகவும் சுலபமான மெது வடை தயார்.
பச்சரிசி பாயசம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1/2 கப்
தண்ணீர் – 1 1/2 கப்
பால் – 1 லிட்டர்
கன்டென்ஸ்டு மில்க் – 200 கிராம்
நெய் – 2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
திராட்சை
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
குங்கும பூ
செய்முறை
1. பச்சரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, 2 விசில் வரும் வரை பிரஷர் குக் செய்யவும்.
2. கடாயில் பால் ஊற்றி கொதிக்கவிடவும்.
3. பால் அளவு பாதியாக குறைந்த பின் வேகவைத்த பச்சரிசியை போட்டு கிளறவும்.
4. இதனுடன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும்.
5. தாளிப்பு கரண்டில் நெய் ஊற்றி, முந்திரி திராட்சை வறுக்கவும்.
6. பால் நன்கு கொதித்து சுண்டும் பொழுது, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.
7. பச்சரிசி பாயசம் தயார்.
Vinayagar Chaturthi is one of the most lovingly celebrated Hindu festivals. It is the birthday of Lord Vinayagar so we lovinglg decorate him, worship him and also prepare food that he loves the most. So do try these recipes and enjoy your festival. Happy Ganesh Chaturthi to you guys from all of us!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2023-09-15 09:00:27 |
Likes | 423 |
Views | 45957 |
Duration | 17:28 |