வறுத்த முட்டை மசாலா | Roasted Egg Masala In Tamil | Egg Masala | Egg Recipes | Non Veg Sidedish |
Description :
வறுத்த முட்டை மசாலா | Roasted Egg Masala In Tamil | Egg Masala | Egg Recipes | Non Veg Sidedish |
#வறுத்தமுட்டைமசாலா #roastedeggmasala #eggrecipe #eggmasala #nonvegsidedish #sidedishforchapati #varuthamuttaimasala #mutaimasala #egg #muttai #Sidedishfornaan
#homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Roasted Egg Masala: https://youtu.be/WZiQuLvQYlE
Our Other Recipes:
முட்டை பொரியல் மசாலா: https://youtu.be/s29t9B4VpNQ
முட்டை குழம்பு: https://youtu.be/M8jxp5lbMig
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
வறுத்த முட்டை மசாலா
தேவையான பொருட்கள்
முட்டையை வறுக்க
எண்ணெய்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
வேகவைத்த முட்டை – 5
வறுத்த முட்டை மசாலா செய்ய
எண்ணெய்
பட்டை – சிறியதுண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
சோம்பு – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 3 துருவியது
பச்சை மிளகாய் – 2 கீறியது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தக்காளி – 4 துருவியது
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர்
சக்கரை – 3/4 தேக்கரண்டி
வறுத்த முட்டைகள்
செய்முறை
1. கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து, வேகவைத்த முட்டையை நாலு பக்கமும் கீறி சேர்த்து கொள்ளவும்.
2. முட்டையில் மசாலா நன்கு ஒட்டும் வரை 2 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்.
3. அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, அதனுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம் சேர்க்கவும்.
4. பின்பு துருவிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாயை கீறி சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
5. இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும். துருவிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
6. அடுத்து மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
7. சிறிதளவு தண்ணீர் ஊற்றி, எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிடவும். பிறகு சக்கரை சேர்த்து கிளறவும்.
8. மசாலா வெந்ததும் அதில் வறுத்த முட்டையை சேர்த்து கிளறி இறக்கினால் வறுத்த முட்டை மசாலா தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-05-11 09:00:17 |
Likes | 468 |
Views | 17883 |
Duration | 4:2 |