வறுத்த முட்டை பர்கர் | Masala Fried Egg Burger Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
வறுத்த முட்டை பர்கர் | Masala Fried Egg Burger in Tamil
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு வடை செய்ய
உருளைக்கிழங்கு – 4 வேகவைத்தது
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பூண்டு – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
கொத்துமல்லி இலை
எலுமிச்சை சாறு – 1/2 பழம்
புதினா மயோ செய்ய
பச்சை மிளகாய் – 1
புதினா இலை
கொத்துமல்லி இலை
எலுமிச்சை சாறு – 1 பழம்
சர்க்கரை – 1/2 தேக்கரண்டி
கல் உப்பு – தேவைக்கு ஏற்ப
இஞ்சி – 1 தேக்கரண்டி நறுக்கிய
பூண்டு – 1 தேக்கரண்டி
தண்ணீர்
மயோனைஸ் – 2 மேசைக்கரண்டி
பர்கர் பன்/முட்டை வறுக்க
பர்கர் பன்
எண்ணெய் – 1 தேக்கரண்டி
முட்டை – 1
மிளகாய் தூள் – சிட்டிகை
உப்பு – சிட்டிகை
வறுத்த முட்டை பர்கர் செய்ய
வறுத்த பர்கர் பன்
வறுத்த முட்டை
தக்காளி – 2 வட்ட துண்டுகள்
வெங்காயம் – 2 வட்ட துண்டுகள்
புதினா மயோ
செய்முறை
உருளைக்கிழங்கு வடை செய்ய
1. உருளைக்கிழங்கு வடை செய்ய முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
2. அடுத்து இதில் மஞ்சத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி அதில் வேகவைத்த உருளைக் கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.
3. அடுத்து கரம்மசாலா தூள், கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி உருளைகிழங்கை நன்கு மசிக்கவும்.
4. மசாலா ஆறியபிறகு வடை போல் தட்டி ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை வறுத்து வைக்கவும்.
புதினா மயோ செய்ய
5. புதினா மயோ செய்ய ஒரு மிக்ஸி ஜாரில் பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லி இலை, எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, உப்பு, இஞ்சி, பூண்டு பொட்ட இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளவும்.
6. அரைத்த விழுதை மயோனைஸுடன் கலக்கவும் புதினா பயன் தயார்.
பர்கர் பன்/முட்டை வறுக்க
7.பர்கர் பன்னை இரண்டாக வெட்டி தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி டோஸ்ட் செய்யவும்.
8. முட்டையை வருக்க தவாவில் எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றிய அதன்மேல் மிளக்காய் தூள், உப்பு தூவி மறுபுறம் திருப்பி நன்கு வறுத்து கொள்ளவும்.
வறுத்த முட்டை பர்கர் செய்ய
9. பர்கர் செய்ய முதலில் டோஸ்ட் செய்த பன் துண்டுகளின் மேல் புதினா மயோ தடவவும்.
10. அடுத்து தக்காளி துண்டுகள் வைத்து அதன் மேல் வறுத்த உருளைக்கிழங்கு வடையை வைக்கவும்.
11. அதை சுற்றி வெங்காயம் துண்டுகளை வைத்து அதன் மேல் வருத்த முட்டையை வைக்கவும்.
12. கடைசியாக மற்ற பன் துண்டை முட்டை மேல் வைத்து பர்கரை மூடவும்.
13. இவை அனைத்தும் விழாமல் இருப்பதற்கு ஒரு பல்குச்சியால் குத்தி வைக்கவும்.
14. அற்புதமான வருத்த முட்டை மசாலா பர்கர் தயார்.
#வறுத்தமுட்டைபர்கர் #முட்டைபர்கர் #MasalaFriedEggBurger
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production: http://www.ventunotech.com
Date Published | 2019-04-27 09:59:15Z |
Likes | 323 |
Views | 18853 |
Duration | 0:05:49 |
Yena cemara use panuriga sis… semaiya eruku.. pls tell
Epdi podiya narukireenga mam.. Enna equipment use panringa mam……
Akka mayonnaise recepies vedio upload pannuga….. different types of mayonnaise….
Super ☺
Hi mam today I saw you in t.v cooking Channel
Picture quality sema
Mayonnaise recipe plz sis
Kitchen Background superr maintain this type of kitchen background
All ur receipe s.are easy and very very tasty…Thank u.sister..
Hummy mam very simple and healthy dish
Check out வெஜ் ஸ்ப்ரிங் ரோல் https://youtu.be/hheh3DHKe1c
Wow very new ideas and healthy