ராகி லட்டு | Ragi ladoo In Tamil | ராகி சாக்லேட் கேக் | Eggless Ragi Chocolate Cake In Tamil |
Description :
ராகி லட்டு | Ragi ladoo In Tamil | ராகி சாக்லேட் கேக் | Eggless Ragi Chocolate Cake In Tamil | Ragi Recipes | Healthy Snack Recipes | Sweet Recipes |
#ragiladoo #ராகிலட்டு #ragirecipes #ladoorecipes #healthyrecipes #sweetrecipes #egglessragichocolatecake #ராகிசாக்லேட்கேக் #egglesscake #chocolatecake #cakerecipe #healthysnacks #ragi #chocolaterecipes #chocolate #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Ragi ladoo: https://www.youtube.com/watch?v=-U_jkdVpMp4
Eggless Ragi Chocolate Cake: https://youtu.be/bZYX8HFEFBs
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
ராகி லட்டு
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு – 1 கப்
முந்திரி பருப்பு – சிறிதளவு
தண்ணீர் – 1/2 கப்
வெல்லம் – 150 கிராம்
ஏலக்காய் தூள்
நெய்
செய்முறை:
1. ஒரு கடாயில் நெய் ஊற்றி கேழ்வரகு மாவு போட்டு குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வறுத்து எடுத்து வைக்கவும்.
2. அடுத்து ஒரு தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி, முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெல்லம் சேர்த்து கரைக்கவும்.
4. வெல்லம் கரைந்த பின் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
5. வெல்லப்பாகு ஆறிய பின் அதை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
6. வறுத்த கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி பருப்பு மற்றும் நெய் ஊற்றி கலக்கவும்.
7. கரைத்த வெல்லப்பாகை சிறிது சிறிதாக ஊற்றி மாவை பிசைந்து கொள்ளவும்.
8. பின் இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும்.
9. ராகி லட்டு தயார்.
ராகி சாக்லேட் கேக்
தேவையான பொருட்கள்
ராகி மாவு – 3/4 கப்
கோதுமை மாவு – 3/4 கப்
கோகோ பவுடர் – 1/4 கப்
சர்க்கரை – 1/2 கப்
பேக்கிங் பவுடர் – 1 1/2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி
பால் – 1 3/4 கப்
வெனிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
வெண்ணெய் – 1/2 கப்
உப்பு
செய்முறை:
1. ராகி சாக்லேட் கேக் செய்ய ஒரு கிண்ணத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, கோகோ பவுடர், சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
2. இந்த கலவையில் காய்ச்சி ஆறவைத்த பால், வெனிலா எசென்ஸ், கரைத்த வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. ஒரு கேக் டின்னை எடுத்து அதில் வெண்ணெய் தடவி அதில் கோதுமை மாவு மற்றும் கோகோ பவுடர் சேர்த்து நன்கு பரப்பி விடவும்.
4. கரைத்த சாக்லேட் கலவையை இந்த கேக் டின்னில் ஊற்றி பரப்பி விடவும்.
5. அடுத்து ஒரு பிரஷர் குக்கரில் கல் உப்பை பரப்பி விட்டு இந்த கேக் டின்னை குக்கரில் வைத்து நாற்பது நிமிடத்திற்கு மிதமான தீயில் விசில் வைக்காமல் வேகவைக்கவும்.
6. நாற்பது நிமிடம் கழித்து கேக் டின்னை எடுத்து அதன் மேல் பகுதிகளை வெட்டி எடுத்து விடவும்.
7. இந்த கேக்கை மேலும் சுவையாக்க டார்க் சாக்லேட்டை பிரெஷ் கிரீமில் கரைத்து இந்த கேக் மேல் பகுதிகளில் ஊற்றவும்.
8. வறுத்த பாதாம் மற்றும் சாக்லேட் சில்லுகளை கொண்டு அலங்கரிக்கவும்.
9. சுவையான மற்றும் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய ராகி சாக்லேட் கேக் தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-09-26 09:00:13 |
Likes | 497 |
Views | 28258 |
Duration | 6:43 |