ராகி இட்லி & தோசை | Ragi Idli & Dosa Recipe in Tamil | Ragi Recipes
Description :
ராகி இட்லி & தோசை | Ragi Idli and Dosa in Tamil
millet recipes
தேவையான பொருட்கள்
ராகி – 100 கிராம்
உளுந்து – 50 கிராம்
இட்லி அரிசி – 100 கிராம்
கல் உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
செய்முறை
1. ராகி மாவு செய்ய முதலில், ராகி, இட்லி அரிசி மற்றும் உளுந்து ஆகியவற்றை தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
2. மூன்று மணி நேரம் கழித்து முதலில் உளுந்தை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைக்கவும்.
3. அடுத்த ராகி மற்றும் இட்லி அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு கிண்ணத்தில் அரைத்த உளுந்தம் மாவையும் ராகி மாவையும், உப்பு சேர்த்து கலந்து எட்டு மணி நேரத்திற்கு புளிக்க வைக்கவும்.
5. எட்டு மணி நேரம் கழித்து மாவு நன்றாக பொங்கி இருக்கும்.
6. பொங்கி இருக்கும் மாவை கிளறாமல் மேலோட்டமாக இருக்கும் மாவை எடுத்து இட்லி தட்டில் ஊற்றி வேக ஏழு நிமிடங்கள் வைக்கவும். ராகி இட்லி தயார்.
7. இதே மாவை பயன்படுத்தி தவாவில் தோசை ஊற்றவும். ராகி தோசை தயார்.
Date Published | 2019-03-25 12:29:08Z |
Likes | 712 |
Views | 46620 |
Duration | 0:03:52 |