முட்டை மஞ்சூரியன் | Egg Manchurian Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
#முட்டைமஞ்சூரியன் #EggManchurian #MuttaiManchurian
முட்டை மஞ்சூரியன்
தயாரிப்பு நேரம் – 15 நிமிடங்கள்
சமையல் நேரம் – 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
சோள மாவு – 2 தேக்கரண்டி
மைதா – 4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
மிளகு தூள் – தேவைக்கு ஏற்ப
தண்ணீர்
எண்ணெய் – பொரிப்பதற்கு
இஞ்சி – 1” பொடியாக நறுக்கியது
பூண்டு – 4 பொடியாக நறுக்கியது
பெரிய வெங்காயம் – பொடியாக நறுக்கியது
குடைமிளகாய் – 1/2 பொடியாக நறுக்கியது
வினிகர் – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
கெட்சப் – 4 மேசைக்கரண்டி
வெங்காயத்தாள் பச்சை பாகம்
செய்முறை
1. ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
2. வேகவைத்த முட்டையை நான்காக வெட்டி கரைத்த மாவில் பிரட்டி எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
3. அடுத்து ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கி வெங்காயத்தாள் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
4. அடுத்த இதில் வினிகர், சோயா சாஸ், தக்காளி கெட்சப், மிளகுத் தூள் சேர்த்துக் கிளறவும்.
5. இந்த கலவையில் பொரித்த முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்.
6. இறுதியாக வெங்காயத்தாள் பச்சை பாகத்தை நறுக்கி சேர்க்கவும்.
7. சுவையான முட்டை மஞ்சூரியன் தயார்.
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-03-21 09:01:00Z |
Likes | 332 |
Views | 13327 |
Duration | 0:02:58 |