முட்டை பராத்தா | Stuffed Egg Paratha Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
முட்டை பராத்தா | Stuffed Egg Paratha in Tamil
தேவையான பொருட்கள்
மாவு தயாரிக்க
கோதுமை மாவு – 1 கப்
தண்ணீர்
எண்ணெய்
உப்பு
பராத்தா நிரப்புவதற்கு
முட்டை – 2
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
கொத்துமல்லி தழை
மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1/4 மேசைக்கரண்டி
கரம் மசாலா – 1/4 மேசைக்கரண்டி
சாட் மசாலா – 1/4 தேக்கரண்டி
உப்பு
#முட்டைபராத்தா #EggStuffedParatha #Eggparatha
செய்முறை
1. முதலில் பராத்தாவிற்கு மாவு தயாரிக்க வேண்டும் அதற்க்கு ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு அதனுடன் உப்பு, எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்
2. பிசைந்த மாவை எடுத்து சப்பாத்தி கட்டை வைத்து சற்று கனமாக தேய்த்து வைத்துக்கொள்ளவும்
3. அடுத்து ஒரு கிண்ணத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, சாட் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்
4. சப்பாத்தியை சுட்டு அதில் நடுவில் சிறிதாக கிழித்து நடுவில் கலக்கி வைத்த முட்டையை ஊற்றி நெய் விட்டு இருபுறமும் சுட்டு வைத்துக்கொள்ளவும்
5. சுவையான மற்றும் எளிமையான முட்டை பராத்தா தயார்
Date Published | 2019-06-11 10:09:13Z |
Likes | 418 |
Views | 30716 |
Duration | 0:04:23 |