மதுரை கறி தோசை | Kari Dosa Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
மதுரை கறி தோசை | Madurai Kari Dosa in Tamil
கீமா மசாலா செய்ய
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
கல் உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 2 தேக்கரண்டி
சீரகம் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மட்டன் கீமா 500 கிராம்
தண்ணீர்
கரி தோசை செய்ய:
தோசை மாவு
மட்டன் கீமா மசாலா
கொத்துமல்லி இலை
எண்ணெய்
#கறிதோசை #KariDosa #MaduraiKariDosa
செய்முறை
1. கறி தோசை செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
2. வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, கல் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
3. இந்தக் கலவையில் மட்டன் கொத்துக்கறி சேர்த்து நன்கு கிளறவும்
4. இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் கடாயை மூடி வேக வைக்கவும்
5. 20 நிமிடம் கழித்து கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கி எடுத்து வைக்கவும்
6. அடுத்து ஒரு கிண்ணத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்
7. அடுத்த ஒரு தோசைக்கல்லில் மாவை ஊற்றி அதன் மேல் அடித்து வைத்த முட்டையை ஊற்றவும்
8. அடுத்து மட்டன் கீமா மசாலாவை தோசையின் மேல் பரப்பி விடவும் இதன் மேல் கொத்தமல்லி தலை, மிளகுத்தூள் சேர்த்து மறுபுறம் திருப்பி விடவும்
9. சூடான மற்றும் சுவையான மதுரை ஸ்டைல் கறி தோசை தயார்
Date Published | 2019-07-10 07:45:01Z |
Likes | 1661 |
Views | 92064 |
Duration | 0:05:31 |