மதுரை உருளை பொட்டலம் | Madurai Urulai Masala Pottalam #potato #food #cooking #aloo
Description :
மதுரை உருளை பொட்டலம் | Madurai Urulai Masala Pottalam Recipe in Tamil | Madurai Kilangu Pottalam | @HomeCookingTamil
#மதுரைஉருளைபொட்டலம் #MaduraiUrulaiMasalaPottalamRecipe #MaduraiKilanguPottalam #homecookingtamil #potato #potatorecipe
மதுரை ஸ்பெஷல் உருளை பொட்டலம்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 3/4 கிலோ
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 1/2 தேக்கரண்டி
பூண்டு – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
இஞ்சி – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
வெங்காயம் – 2 நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கடலை மாவு – 2 1/2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
1. முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
2. அடுத்து பானில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு சேர்த்து லேசாக வறுக்கவும்.
3. நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்.
4. உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
5. பிறகு கறிவேப்பிலை, கடலைமாவு அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும்.
6. பின்பு மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து விடவும்.
7. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
8. சுவையான மதுரை ஸ்பெஷல் உருளை பொட்டலம் தயார்.
Date Published | 2024-11-14 11:30:33 |
Likes | 1355 |
Views | 47287 |
Duration | 57 |