மட்டன் சுக்கா | Mutton Sukka Recipe in Tamil

மட்டன் சுக்கா | Mutton Sukka Recipe in Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

மட்டன் சுக்கா | Mutton Sukka in Tamil

தேவையான பொருட்கள்:

மசாலா தூள் தயாரிக்க

சீரகம் -1 தேக்கரண்டி
முழு மிளகு – 1 1/2 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
தனியா – 1 மேசைக்கரண்டி
காய்ந்த சிவப்பு மிளகாய் -10

சுக்கா செய்ய

அரைத்த மசாலா தூள் – 1 1/2 மேசைக்கரண்டி
தண்ணீர் – 1 கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
கல் உப்பு – 1/2 தேக்கரண்டி
மட்டன் – 300 கிராம்
சிறிய வெங்காயம் – 200 கிராம் நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 கீறியது
தக்காளி – 2 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
தேங்காய் எண்ணெய் – 1 1/2 மேசைக்கரண்டி

செய்முறை
1. மட்டனை வேக வைக்க ஒரு பிரஷர் குக்கரில் தண்ணீர் ஊற்றி எலும்பில்லாத மட்டன் துண்டுகள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து குக்கரை மூடி மிதமான சூட்டில் 7 விசில் வரும்வரை வேக வைக்கவும்.
2. அடுத்து ஒரு மசாலா பவுடர் அரைக்க மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், தனியா, சோம்பு, சீரகம் மற்றும் முழு மிளகு சேர்த்து பொடியாக அரைக்கவும்.
3. அடுத்து ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் பொன்னிறமானதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
5. அடுத்து அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
6. தக்காளி வதங்கியதும் அதில் அரைத்த மசாலா தூள் சேர்த்து பச்சை மணம் போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
7. அனைத்தும் நன்கு வதங்கிய பின் வேக வைத்த மட்டனை வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து கலக்கவும்.
8. அடுத்து உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேக விடவும்
9. தண்ணீர் முழுவதும் வற்றி மசாலா மட்டனுடன் நன்கு திரண்டு வந்த பிறகு கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
10. மிக அருமையான மட்டன் சுக்கா தயார்.

#மட்டன்சுக்கா #MuttonSukka #MuttonRecipes

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoH…
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : http://www.ventunotech.com
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store – https://www.amazon.in/shop/homecookingshow


Rated 4.89

Date Published 2019-08-11 04:30:02Z
Likes 960
Views 52245
Duration 0:03:37

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..