மட்டன் கட்லெட் | Mutton Cutlet Recipe in Tamil | Mutton Recipes | Snack Recipes | Non Veg Starter |
Description :
மட்டன் கட்லெட் | Mutton Cutlet Recipe in Tamil | Mutton Recipes | Snack Recipes | Non Veg Starter |
#மட்டன்கட்லெட் #muttoncutlet #nonvegstarter #snackrecipes #starter #partyrecipes
#partysnacks #muttonrecipes #cutletrecipes #homecookingtamil #hemasubramanian
மட்டன் கட்லெட்
தயாரிப்பு நேரம் – 30 நிமிடங்கள்
சமையல் நேரம் – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
கொத்துக்கறி வேக வைக்க
மட்டன் கொத்துக்கறி – 200 கிராம்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு தண்ணீர்
கட்லெட் செய்வதற்கு
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
சோம்பு – 1/4 தேக்கரண்டி
பூண்டு – 1/2 தேக்கரண்டி (நறுக்கப்பட்ட)
இஞ்சி – 1/2 தேக்கரண்டி (நறுக்கப்பட்ட)
பச்சை மிளகாய் – 1 (நறுக்கப்பட்ட)
வெங்காயம் – 1 (நறுக்கப்பட்ட)
வேகவைத்த உருளைக்கிழங்கு – 4
முட்டை – 1
கொத்தமல்லி இலைகள்
கறிவேப்பிலை
பிரட் தூள்
பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
1. குக்கரில் கொத்துக்கறி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள் , மல்லி தூள், கரம் மசாலா, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்
2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய், சோம்பு, நறுக்கிய பூண்டு, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
3. வேகவைத்த உருளைக்கிழங்கை வதக்கியவற்றுடன் சேர்த்து கலக்கவும் ,
4. அந்த கலவையில் வேக வைத்த கொத்துக்கறியை சேர்த்து தண்ணீர் ஆவியாகும் வரை வதக்கவும்
5. கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்
6. இக்கலவையை நன்கு ஆற விடவும்
7. அடுத்து கட்லெட் செய்வதற்கு ஒரு முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கலக்கவும்
8. பின்பு கொத்துக்கறி கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து வடை போன்று வட்டமாக கைகளில் தட்டவும்
9. தட்டப்பட்ட கட்லெட்டை முட்டையில் தோய்த்து பின்பு பிரட் தூள்களை அதன் மேல் முழுவதும் தூவ வேண்டும்
10. பத்து நிமிடங்களுக்கு கட்லெட்டை குளிர விடவும்
11. ஒரு கடாயில் பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடேற்றவும்
12.சூடேறிய எண்ணெயில் கட்லெட்டை இரு புறமும் பொன்னிறமாகும் வரை பொறிக்கவும்
13. சூடான மட்டன் கட்லெட் சுவைக்க தயாராக உள்ளது
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoH…
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-02-05 12:16:56Z |
Likes | 289 |
Views | 12531 |
Duration | 0:03:20 |
Hi sis
Super
Nenga Tamil ahhhhh.
Super mam I try it mam more video like this upload
Where do you live in tamilnadu?I thought you belong to North India
தாபா styles சென்னா மசாலா பொடுங்க
Wov
Super mam.