பூண்டு ஊறுகாய் | Garlic Pickle In Tamil | #shorts #garlicpickle
Description :
பூண்டு ஊறுகாய் | Garlic Pickle In Tamil | Sidedish For Curd Rice | @HomeCookingTamil
#garlicpickle #shorts #picklerecipe #poonduoorugai #garlicpicklerecipe
பூண்டு ஊறுகாய்
தேவையான பொருட்கள்
முழு பூண்டு – 6
கடுகு – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd )
வெந்தயம் – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Sh0x1P )
நல்லெண்ணெய் – 1/2 கப் (Buy: https://amzn.to/2GUoDKd)
கெட்டியான புளி தண்ணீர் – 1/2 கப் (Buy: https://amzn.to/2Sh3kJG)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
உப்பு – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகாய் தூள் – 4 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
பொடித்த வெல்லம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RVA0YZ)
செய்முறை:
1. பூண்டை தோலுரித்து தனியாக வைக்கவும்.
2. கடுகு, வெந்தய பொடி செய்ய, ஒரு பானில் கடுகு, வெந்தயம் சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். பிறகு நன்கு ஆறவிட்டு பொடியாக அரைக்கவும்.
3. ஒரு அகலமான பானில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் உரித்த பூண்டை சேர்த்து வதக்கவும்.
4. வதக்கிய பூண்டில் பாதியளவு தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள பூண்டை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
5. ஒரு கிண்ணத்தில் புளி மற்றும் சூடு தண்ணீர் சேர்த்து கரைத்து கெட்டியான புளி தண்ணீரை எடுத்து வைக்கவும்.
6. பானில் நல்லெண்ணெய் மற்றும் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
7. கறிவேப்பிலை வறுபட்டதும் அரைத்த பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
8. பின்பு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
9. கெட்டியான புளி தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.
10. அடுத்து அரைத்த கடுகு, வெந்தய பொடியை சேர்த்து கலந்து விடவும்.
11. பின்பு பொரித்த பூண்டை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
12. இறுதியாக பொடித்த வெல்லத்தை சேர்த்து கலந்து குறைந்த தீயில் 15 நிமிடம் வேகவிடவும்.
13. அருமையான பூண்டு ஊறுகாய் தயார்.
Date Published | 2024-05-03 15:30:20 |
Likes | 224 |
Views | 6465 |
Duration | 1: |