பூசணிக்காய் மோர் குழம்பு | Ash Gourd Mor Kuzhambu Recipe in Tamil #shorts #cooking #vegcurryrecipe
Description :
பூசணிக்காய் மோர் குழம்பு | Ash Gourd Mor Kuzhambu Recipe in Tamil | @HomeCookingTamil
#பூசணிக்காய்மோர்குழம்பு #AshGourdMorKuzhambuRecipe #PoosanikaiMorKuzhambu #மோர்குழம்பு #buuttermilkcurry #homecookingtamil
பூசணிக்காய் மோர் குழம்பு
தேவையான பொருட்கள்
மசாலா பேஸ்ட் அரைக்க
எண்ணெய் – 3 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
தனியா – 1 தேக்கரண்டி
சீரகம் – 3 தேக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 4 நறுக்கியது
துவரம் பருப்பு – 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை
துருவிய தேங்காய் – 3 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள்
அடித்த தயிர் – 1 கப்
வெல்லம் – 2 துண்டு
தண்ணீர்
பூசணிக்காய் மோர் குழம்பு செய்ய
எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
வெள்ளை பூசணிக்காய் – 200 கிராம்
உப்பு – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
தண்ணீர்
வெல்லம்
கொத்தமல்லி இலை – நறுக்கியது
செய்முறை
1. ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம், மிளகு, சேர்த்து வறுக்கவும்.
2. அடுத்து தனியா, சீரகம் ,சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
3. பின்பு நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், துவரம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும்.
4. கறிவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விடவும்.
5. பிறகு பெருங்காயத்தூள், அடித்த தயிர், வெல்லம் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு நன்கு கலந்து விடவும்.இந்த கலவை நன்கு ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
6. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து கலந்து விடவும்.
7. கடுகு பொரிய ஆரம்பித்ததும் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.
8. அடுத்து வெள்ளை பூசணிக்காய், உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் சேர்த்து கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
9. பின்பு அரைத்த மசாலா விழுது, தண்ணீர், உப்பு, வெல்லம், ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் கடாயை மூடி கொதிக்க விடவும்.
10. இறுதியாக கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கி விடவும்.
11. சுவையான பூசணிக்காய் மோர் குழம்பு தயார்.
Date Published | 2024-10-06 09:00:20 |
Likes | 780 |
Views | 22669 |
Duration | 1: |