புளியோதரை | Puliyodharai Recipe in Tamil | Tamarind Rice recipe
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
புளியோதிரை
தயாரிப்பு நேரம் – 30 நிமிடங்கள்
சமையல் நேரம் – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
மசாலா தூள் தயாரிக்க
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
மிளகு – 1/4 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
எள் – 1 தேக்கரண்டி
தனியா – 2 தேக்கரண்டி
காய்ந்த சிவப்பு மிளகாய் – 5
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
புலி கரைசல் செய்ய
அரைத்த மசாலா பொடி
புளி – 100 கிராம்
தண்ணீர் – 2 கப்
நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
வேர்க்கடலை – 1/4 கப்
காய்ந்த சிவப்பு மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
வெல்லம் – 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை
1. முதலில் மசாலாதூள் அரைக்க, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, எள்ளு, வெந்தயம், தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும்.
2. இந்த மசாலாவை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து கொள்ளவும்.
3. புளியை இரண்டு கப் தண்ணீரில் முப்பது நிமிடங்கள் ஊறவைத்து, புளியை நன்கு கரைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
4. அடுத்த ஒரு கடாயில், நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து கிளறவும்.
5. கடுகு பொரிந்தவுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.
6. பருப்புகள் அனைத்தும் வறுபட்ட பிறகு புளிக்கரைசலை ஊற்றி, பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
7. அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து கலக்கவும்.
8. பிறகு அரைத்த மசாலா பொடி முழுவதும் சேர்த்த பச்சை மனம் நீங்கி, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். புலி கரைசல் தயார்.
9. அடுத்து வேக வைத்த சூடான சாதத்துடன் தேவையான அளவு புளி கரைசல் சேர்த்து கிளறவும்.
10. சுவையான புளியோதரை தயார்.
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-03-15 08:17:17Z |
Likes | 1216 |
Views | 66773 |
Duration | 0:04:41 |