பிரஷர் குக்கர் மட்டன் பிரியாணி | Pressure Cooker Mutton Biryani Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
பிரஷர் குக்கர் மட்டன் பிரியாணி
தயாரிப்பு நேரம் – 40 நிமிடங்கள்
சமையல் நேரம் – 45 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
மட்டன் – 1 கிலோ
மஞ்சள் தூள் – 3/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு
மசாலா விழுதுக்காக
சிறிய வெங்காயம் – 6
பூண்டு – 10 பற்கள்
பச்சை மிளகாய் – 2
சிவப்பு மிளகாய் – 6
தேங்காய் – 2 தேக்கரண்டி (துருவியது )
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
புதினா இலைகள்
கொத்தமல்லி இலைகள்
இஞ்சி
தண்ணீர்
சமையலுக்காக
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது )
தக்காளி – 3 (நறுக்கியது )
பாஸ்மதி அரிசி – 3 கப் (30 நிமிடங்கள் ஊறவைத்தது )
நீர்த்த தேங்காய் பால் – 3 கப்
கொத்தமல்லி இலைகள்
புதினா இலைகள்
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
பிரியாணி இலை
உப்பு
#பிரஷர்குக்கர்மட்டன்பிரியாணி #PressureCookerMuttonBiryani #MuttonBiryani
செய்முறை
1. மட்டன் பிரியாணி சமைக்க பெரிய மட்டன் துண்டுகளை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகிவற்றை சேர்த்து ஒரு 15 நிமிடம் ஊற வைக்கவும்
2. அடுத்தது மசாலா அரைக்க சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், துருவிய தேங்காய், புதினா இலை, கொத்தமல்லி இலை, மல்லித்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு மை போல் அரைக்க வேண்டும்
3. குக்கரில் நெய், எண்ணெய், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும்
4. வெங்காயம் சிவந்த பிறகு நறுக்கிய தக்காளி, அரைத்த மசாலா சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும்
5. ஊற வைத்த மட்டன் துண்டுகளை வதக்கியவற்றுடன் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கலக்கவும்
6. இந்த கலவையில் உப்பு, நீர்த்த தேங்காய் பால், கொத்தமல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை நன்கு கலக்கிய பின்பு ஏழு விசில் வரும் வரை வேக வைக்கவும்
7. வேக வைத்த மட்டனில் முப்பது நிமிடம் ஊற வைத்த பாசுமதி அரிசியை கலந்த பின்பு குக்கரை மூடிவிட்டு ஏழு நிமிடங்களுக்கு சமைக்கவும்
8. அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் கழித்து குக்கரை திறக்கவும்
9. சூடான சுவையான பிரஷர் குக்கர் மட்டன் பிரியாணி தயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoH…
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-02-08 11:30:01Z |
Likes | 874 |
Views | 55398 |
Duration | 0:04:08 |