பன் தோசை | Bun Dosa Recipe in Tamil #breakfastrecipes #dosa #recipe #cooking
Description :
பன் தோசை | Bun Dosa Recipe in Tamil | Instant Breakfast Recipes | Bun Dosa in 15 Minutes | @HomeCookingTamil
#பன்தோசை #BunDosaRecipe #InstantBreakfastRecipes #BunDosa
பன் தோசை
தேவையான பொருட்கள்
ரவா – 1 கப் (250 கிராம்)
புளிச்ச தயிர் – 3/4 கப்
தண்ணீர் கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலைபெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டிகொத்தமல்லி இலை
அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி
உப்பு
சோடா உப்பு
எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவுக்கு ரவா, முக்கால் அளவுக்கு புளித்த தயிர், அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை ஒரு மிக்ஸ்ர் ஜாரில் மாற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
ஒரு கடாயில் மூன்று டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு, ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சேர்த்து வறுக்கவும்.
இதனுடன், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, சேர்த்து நன்கு வதக்கி, கால் டீஸ்பூன் பெருங்காய தூள், ஒரு டீஸ்பூன் உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து மாவில் சேர்க்கவும்.
ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலக்கவும்.
ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கொஞ்சமாக மாவை ஊற்றி வேக விடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் இன்னொரு பக்கம் திருப்பி விட்டு வேக விடவும்.
இரண்டு பக்கமும் வெந்ததும், கரண்டியில் இருந்து எடுத்து விடவும்.
பஞ்சு போன்று இருக்கும் இந்த பன் தோசையை உங்களுக்கு பிடித்த சட்னி உடன் சூடாக பரிமாறவும்.
Date Published | 2024-11-10 08:30:17 |
Likes | 7399 |
Views | 332993 |
Duration | 59 |