நவராத்திரி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Navarathiri Special Recipes | Variety Rice Recipes | Rice Recipes
Description :
நவராத்திரி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Navarathiri Special Recipes | Variety Rice Recipes | Rice Recipes | @HomeCookingTamil
#varietyricerecipe #puliyotharai #lemonrice #thengaisadam
Chapters:-
Promo – 00:00
Tamarind Rice: 00:24
Curd Rice: 07:36
Lemon Rice: 11:35
Coconut Rice: 14:13
புளியோதரை
தேவையான பொருட்கள்
மசாலா தூள் அரைக்க
தனியா – 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
வெள்ளை எள்ளு – 1 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் – 5
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
புளியோதரை செய்ய
புளி – 1 கப்
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
வேர்க்கடலை – 1 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் – 4
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கல் உப்பு – 2 மேசைக்கரண்டி
பொடித்த வெல்லம் – 1 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
செய்முறை:
1. முதலில் சுடு தண்ணீர் ஊற்றி புளியை ஊறவைக்கவும்.
2. கடாயில் தனியா, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், வெள்ளை எள்ளு, காய்ந்தமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
3. பின்பு நன்கு ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து தூளாக அரைத்து கொள்ளவும்.
4. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து 2 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
5. பின்பு அதில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்துவிடவும்.
6. அடுத்து புளி கரைசலை ஊற்றவும். பின்பு மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து கலந்துவிட்டு மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
7. பிறகு பொடித்த வெல்லம் சேர்க்கவும்.
8. பின்பு அரைத்த மசாலா தூள் சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும். தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
9. சூடான சாதத்துடன் தேவையான அளவு புளியோதரை மிக்ஸை கலந்து 30 நிமிடத்திற்கு பிறகு பரிமாறவும்.
10. புளியோதரை மிக்ஸை பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
தயிர் சாதம்
தேவையான பொருட்கள்
சாதம் – 1 கப்
தயிர்
பால் – 1 கப் காய்ச்சி ஆற வைத்தது
தண்ணீர்
உப்பு – 1 தேக்கரண்டி
இஞ்சி – 2 தேக்கரண்டி நறுக்கியது
பச்சை மிளகாய் – நறுக்கியது
கேரட் – துருவியது
மாதுளைப்பழம்
கொத்தமல்லி இலை
தாளிப்பு
எண்ணெய் – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh)
கடுகு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/449sawp )
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3OrZ9qe)
கறிவேப்பிலை
சின்ன வெங்காயம்
செய்முறை:
1. சமைத்த அரிசியை மசித்து, அதில் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்க்கவும்.
2. நன்றாக கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும்.
3. பின்பு கெட்டியான தயிர் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
4. அதில் உப்பு, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய கேரட், மாதுளைப்பழம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
5. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும், உளுத்தம் பருப்பு, கடுகு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
6. அடுப்பை அணைத்து அதில் , கறிவேப்பிலை, பெருங்காய தூள், வெங்காயம் சேர்க்கவும்.
7. பின்பு தாளிப்பை தயிர் சாதத்துடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
8. இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும். துருவிய கேரட் மற்றும் மாதுளைப்பழம் கொண்டு அலங்கரிக்கவும்.
9. சுவையான தயிர் சாதம் தயார்.
எலுமிச்சை சாதம்
தேவையான பொருட்கள்
வேகவைத்த சாதம்
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 4 தேக்கரண்டி
எலுமிச்சைப்பழம் – 2
வேர்க்கடலை
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
சிவப்பு மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2 கீறியது
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பில்லை
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில், வேகவைத்த சாதம், மஞ்சள் தூள், உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி வேர்க்கடலையை சேர்த்து வறுக்கவும்.
3. அடுத்து கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, சீரகம், கடுகு, முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
4. கடுகு பொரிய ஆரம்பித்ததும், இதில் சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு கிளறவும்.
5. பிறகு கலந்து வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்.
6. அடுத்து எலுமிச்சை சாறை சாதத்துடன் சேர்த்து மிதமான தீயில் கலந்து விடவும்.
7. அருமையான எலுமிச்சை சாதம் தயார்.
தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 1 கப் (250 மில்லி கப்)
தேங்காய் துருவல் – 1 1/4 கப் (250 மில்லி கப்)
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பில்லை
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
இஞ்சி – 1 தேக்கரண்டி நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
வறுத்த வேர்க்கடலை – 1 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு – 1 மேசைக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2024-10-03 09:00:08 |
Likes | 215 |
Views | 11597 |
Duration | 17:50 |