தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Diwali Recipes In Tamil | Murukku | Ghee Mysore Pak | @HomeCookingTamil

தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Diwali Recipes In Tamil | Murukku | Ghee Mysore Pak | @HomeCookingTamil

Description :

தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Diwali Recipes In Tamil | Murukku | Ghee Mysore Pak | @HomeCookingTamil

#diwalirecipesintamil #diwalisweetsrecipesintamil #murukkurecipe #mysorepakrecipeintamil

Chapters:
Promo – 00:00
Murukku – 00:24
Ghee Mysore Pak – 05:23
Masala Vada – 11:04
Gulgule – 14:25

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

முறுக்கு
தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு – 5 மேசைக்கரண்டி
அரிசி மாவு – 2 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
வெள்ளை எள்ளு – 1 தேக்கரண்டி
ஓமம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
நெய் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு

நெய் மைசூர் பாக்
தேவையான பொருட்கள்

கடலை மாவு – 1 கப் (250 மில்லி கப்)
நெய் – 150 மில்லி
தண்ணீர் – 1/4 கப்
சர்க்கரை – 1 கப் (250 மில்லி கப்)

செய்முறை:
1. ஒரு பானில் கடலை மாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குறைந்த தீயில் 10 நிமிடம் வறுக்கவும்.
2. வறுத்த கடலை மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் சலித்து தனியாக வைக்கவும்.
3. அடுத்து நெய்யை உருக்கி, உருக்கிய நெய்யில் பாதியை சலித்த கடலை மாவில் ஊற்றி கட்டியின்றி கலக்கவும்.
4. மைசூர் பாக் செய்யும் தட்டின் எல்லாப் பக்கங்களிலும் நெய் தடவி வைக்கவும்.
5. ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து கரைக்கவும்.
6. சர்க்கரை கரைந்தவுடன் கடலை மாவு மற்றும் நெய் கலவையை ஊற்றி குறைந்த தீயில் கலக்கவும்.
7. சிறிது கெட்டியானதும் படிப்படியாக நெய்யை சேர்த்து, தொடர்ந்து கலந்து கொண்டே 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
8. பின்பு மைசூர் பாக் திரண்டு வந்ததும் நெய் தடவிய தட்டிற்கு மாற்றவும். மேலே நெய் தடவி 2 மணி நேரம் ஆற விடவும்.
9. ஆறியவுடன் டின்னில் இருந்து எடுத்து விரும்பிய வடிவில் வெட்டி நெய் மைசூர் பாக்கை பரிமாறவும்.

மசாலா வடை
தேவையான பொருட்கள்

கடலை பருப்பு – 1 கப்
சோம்பு – 1 தேக்கரண்டி
பட்டை – 1 சிறிய துண்டு
கிராம்பு – 2
சிவப்பு மிளகாய் – 4
உப்பு – 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது
பூண்டு – 3 பற்கள் நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
கறிவேப்பில்லை, கொத்தமல்லி இலை
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை:
1. கடலை பருப்பை கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. சிறிதளவு ஊறவைத்த கடலை பருப்பை தனியாக எடுத்து வைக்கவும்.
3. அடுத்து மிக்ஸியில், 2 மேசைக்கரண்டி ஊறவைத்த கடலை பருப்பு, சீரகம், பட்டை, கிராம்பு, சிவப்பு மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும்.
4. பிறகு மீதமுள்ள கடலை பருப்பை சேர்த்து மீண்டும் கொரகொரப்பாக அரைக்கவும்.
5. அரைத்த கடலை பருப்பு கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதனுடன், தனியே எடுத்து வைத்துள்ள கடலை
பருப்பு, பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
6. சிறிதளவு வடை கலவையை எடுத்து வடை போல் தட்டவும்.
7. ஒரு கடாயில் பொரிக்க எண்ணெய் ஊற்றி சூடாக்கி, தட்டிய வடைகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
8. தேங்காய் சட்னி மற்றும் சூடான மசாலா டீ உடன் மசாலா வடையை சூடாக பரிமாறவும்.

குல்குலே
தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 1/2 கப்
வெல்லம் – 1 கப் (250 மி.லி கப்)
தண்ணீர் – 1 கப்
ரவா – 2 தேக்கரண்டி
சோம்பு – 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை:
1. ஒரு சாஸ் பானில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரைக்கவும்.
2. ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, ரவா, சோம்பு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. அடுத்து கரைத்த வெல்லத்தை சேர்த்து வடை மாவு பதத்திற்கு கலந்து 5 நிமிடம் ஊறவிடவும்.
4. பின்பு பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சிறிதளவு மாவை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாகும் பொரித்து எடுக்கவும்.
6. அருமையான குல்குலே தயார்.

Diwali is one of the most celebrated festivals in India. Crackers, diyas, kolams are not the only specialities on this occasion. There is much more enjoyable factor added to the celebration, i. e., mainly food! We make several varieties of food on the day of diwali, share it without family and friends and enjoy a lot. So today, we have put together 4 wonderful sweets and snacks in a video so you can have an immediate reference and prepare the items quickly. Watch the video till the end to get a step by step process, try these recipes and enjoy. Make your festival more brighter and happier💕

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2023-11-02 09:00:09
Likes 452
Views 46547
Duration 18:1

Article Categories:
South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..