தக்காளி சூப் | Tomato Soup InTamil

தக்காளி சூப் | Tomato Soup InTamil

Description :

தக்காளி சூப் | Tomato Soup InTamil

தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பட்டை – 1″ துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 1
முழு தனியா – 1 & 1/2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
முழு மிளகு – 1 தேக்கரண்டி
நாட்டு தக்காளி – 1/2 கிலோ
இஞ்சி – 2″ இடித்தது
பூண்டு – 10 பற்கள் தோலுடன் இடித்தது
கொத்தமல்லி இலையின் தண்டு
புதினா இலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கல் உப்பு – 1 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – சிறிதளவு
தண்ணீர்

செய்முறை
1. ஒரு அகல பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்க்கவும்.
2. அடுத்து முழு தனியா, சீரகம் மற்றும் முழு மிளகு ஆகியவற்றை தனி தனியாக இடித்து சேர்க்கவும்.
3. இவற்றுடன் நறுக்கிய நாட்டு தக்காளி, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி தண்டு, புதினா இலை, மஞ்சள் தூள், கல் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, பாத்திரத்தை மூடி, 30 – 40 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவிடவும்.
4. 20 நிமிடங்கள் கழித்து, நெய் சேர்த்து, மேலும் 20 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
5. 40 நிமிடங்கள் கழித்து அனைத்தும் நன்கு வெந்தபின் அடுப்பை அணைக்கவும்.
6. செய்த தக்காளி கலவையை மசித்து வடிகட்டவும்.
7. தக்காளி ஷோர்பா தயார்.
8. நறுக்கிய கொத்தமமாலி இலை தூவி பரிமாறவும்.

#தக்காளிசூப்#TomatoSoup#TomatoSoupInTamil

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.87

Date Published 2020-01-05 11:30:00Z
Likes 401
Views 20487
Duration 0:03:33

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..