ஜோத்புரி காபுலி புலாவ் | Jodhpuri Kabuli Pulao In Tamil | Lunch Recipe | Pulao Recipes |
Description :
ஜோத்புரி காபுலி புலாவ் | Jodhpuri Kabuli Pulao In Tamil | Lunch Recipe | Pulao Recipes |
#jodhpurikabuli #ஜோத்புரிகாபுலிபுலாவ் #pulaorecipes #rajastanipulao #ricerecipe
#lunchrecipes #lvegetablepulao #specialpulao #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Jodhpuri kabuli : https://www.youtube.com/watch?v=NOKrFkHbLiY&t=7s
Our Other recipes:
காலிஃபிளவர் புலாவ் : https://www.youtube.com/watch?v=_-hMPKlByDc
பசலைக்கீரை புலாவ் : https://www.youtube.com/watch?v=VRq1Z9IFE_E
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
ஜோத்புரி காபுலி புலாவ்
தேவையான பொருட்கள்
காய்கறிகளை பொரிக்க
எண்ணெய் பொரிப்பதற்கு
பெரிய வெங்காயம் – 3 நீளவாக்கில் நறுக்கியது
கேரட் – 1 நறுக்கியது
காலிஃபிளவர் – 1 கப் நறுக்கியது
உருளைக்கிழங்கு – 2 மெல்லியதாக நறுக்கியது
பிரட் – 2 துண்டுகள்
முந்திரி பருப்பு – 1 கப்
திராட்சை – 1/2 கப்
காய்கறி மசாலா செய்ய
பெரிய வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பூண்டு – 4 பற்கள் நறுக்கியது
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
பிரியாணி இலை
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
பட்டை தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
தயிர் – 1 கப்
தக்காளி – 1 நறுக்கியது
குடைமிளகாய் – 1 நறுக்கியது
பட்டாணி – 1/2 கப் வேகவைத்தது
முந்திரி, திராட்சை வறுத்தது
புதினா இலை
கொத்தமல்லி இலை
புலாவ் செய்ய
3/4 பாகம் வேகவைத்த பாஸ்மதி அரிசி
குங்கும பூ தண்ணீர்
நெய்
கொத்தமல்லி இலை
பொரித்த பிரட் துண்டுகள்
பொரித்த முந்திரி, திராட்சை
காய்கறி மசாலா
செய்முறை
1. பாஸ்மதி அரிசியை கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
2. வாசனை பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து அரிசி’யை முக்கால் பாகம் வேகவைத்து வடித்து எடுத்து வைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் சூடு செய்து, பெரிய வெங்காயம், கேரட், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, பிரட் துண்டுகள், முந்திரி பருப்பு, திராட்சை ஆகியவற்றை பொரித்து எடுத்து வைக்கவும்.
4. மிக்ஸியில் பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சேர்த்து அரைக்கவும்.
5. கடாயில் எண்ணெய் சூடு செய்து, வாசனை பொருட்கள், அரைத்த மசாலா விழுது சேர்த்து வதக்கவும்.
6. பச்சை வாசனை போனபின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், பட்டை தூள், சேர்த்து வதக்கவும்.
7. அடுத்து இதில் தயிர் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
8. இதனுடன், தக்காளி, வேகவைத்த பச்சை பட்டாணி, குடைமிளகாய், பொரித்த காய்கறிகள், முந்திரி பருப்பு, திராட்சை, கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளறவும்.
9. கடாயை மூடி 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
10. காய்கறி மசாலா தயார். எடுத்துவைக்கவும்.
11. அகல பாத்திரத்தில், காய்கறி மசாலா, இதன் மேல் வேகவைத்த சாதம், போட்டு சமமாக பரப்பவும்.
12. மறுபடியும் காய்கறி மசாலா, மீதம் இருக்கும் சாதம் போட்டு சமம் செய்யவும்.
13. இதன் மேல், நெய், குங்கும பூ தண்ணீர், பொரித்த பிரட் துண்டுகள், முந்திரி பருப்பு, திராட்சை, கொத்தமல்லி இலை சேர்த்து, பாத்திரத்தை மூடவும்.
14. குறைந்த தீயில் 20 நிமிடம் தம் செய்யவும்.
15. ஜோத்புரி காபுலி புலாவ் தயார்
You can buy our book and classes on https://www.21frames.in/shopHAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecookingFACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamilINSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2020-12-01 05:00:14 |
Likes | 486 |
Views | 16485 |
Duration | 7:47 |