ஜினி தோசை | Jini Dosa Recipe in Tamil

ஜினி தோசை | Jini Dosa Recipe in Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

ஜினி தோசை | Jini Dosai in Tamil

தேவையான பொருட்கள்

பால் – 1/2 கப்
மைதா – 1 தேக்கரண்டி
மொஸெரெல்லா சீஸ் – 1/2 கப்
சீஸ் ஸ்லைஸ் – 1
பாஸ்தா சாஸ் – 2 தேக்கரண்டி
சில்லி சாஸ் – 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 மெல்லியதாக நறுக்கியது
முட்டை கோஸ் – 1/4 கப் மெல்லியதாக நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1/4 கப் மெல்லியதாக நறுக்கியது
மஞ்சள் குடைமிளகாய் – 1/4 கப் மெல்லியதாக நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் – 1/4 கப் மெல்லியதாக நறுக்கியது
வெண்ணெய்

செய்முறை
1. சினி தோசை செய்வதற்கு முதலில் சீஸ் சாஸ் செய்ய வேண்டும். இதற்கு ஒரு கடாயில் வெண்ணெய், பால், மைதா மாவு, துருவிய மொஸெரெல்லா சீஸ் மற்றும் சீஸ் ஸ்லைஸ் சேர்க்கவும். அனைத்தும் நன்றாக உருகும் வரை கிளறி தனியாக எடுத்து வைக்கவும். சீஸ் சாஸ் தயார்.
2. தவாவில் தோசை மாவு ஊற்றி மெல்லியதாக சுற்றி கொள்ளவும் அனைத்தும் இடத்திலும் மாவு சமமாக இருக்க வேண்டும். அடுத்து தோசையின் மேல் வெண்ணையை தடவவும்.
3. தோசையின் மேல் பாஸ்தா சாஸ், சில்லி சாஸ், பெரிய வெங்காயம், முட்டைகோஸ், பச்சை குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் ஆகியவற்றை போடவும்.
4. தோசையின் மேல் போட்ட சாஸ் மற்றும் காய்கறிகளை கலக்கவும்.
5. இதன் மேல் துருவிய மொஸெரெல்லா சீஸ் போட்டு உருகும் வரை வேகவைக்கவும்.
6. அடுத்து தோசையை ஒரு தட்டில் மாற்றி அதை ரோல் செய்து துண்டுகளாக வெட்டி சீஸ் சாஸை ஊற்றவும்.
7. சுவையான சினி தோசை தயார்.

#ஜினிதோசை #JiniDosa #StreetFood

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow

A Ventuno Production: http://www.ventunotech.com


Rated 4.72

Date Published 2019-04-26 08:23:40Z
Likes 738
Views 52481
Duration 0:04:34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..