ஜவ்வரிசி இட்லி | Javvarisi Idli Recipe #idli #breakfast #javvarisiidli #sabudana #food
Description :
ஜவ்வரிசி இட்லி | Javvarisi Idli Recipe in Tamil | Idli recipe | Breakfast | @HomeCookingTamil
#ஜவ்வரிசிஇட்லி #JavvarisiIdliRecipe #Idlirecipe #Breakfast #homecookingtamil
ஜவ்வரிசி இட்லி
தேவையான பொருட்கள்
நைலான் ஜவ்வரிசி – 1/2 கப்
எண்ணெய் – 4 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
இஞ்சி
பச்சை மிளகாய் – 1
தேங்காய்
கறிவேப்பிலை
வெங்காயம் – 1 நறுக்கியது
உப்பு – 1/2 தேக்கரண்டி
ரவை – 1 கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது
தயிர் – 1 கப்
தண்ணீர்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் அரை கப் சிறிய அளவிலான ஜவ்வரிசியை எடுத்து, குறைந்தது எட்டு மணிநேரம் ஊற வைக்கவும்.
ஒரு அகலமான கடாயில், 4 டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும், ஒரு தேக்கரண்டி கடுகு மற்றும் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு கால் டீஸ்பூன் பெருங்காயம் தூள், ஒரு துண்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, ஒரு துண்டு பச்சை மிளகாய், ஒரு துண்டு தேங்காய், நறுக்கிய சில கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி.. வெங்காயத்தை 2-3 நிமிடங்கள் வதக்கவும். பிறகு அரை டீஸ்பூன் உப்பு, ஒரு கப் ரவா சேர்த்து கலக்கவும். தீயை குறைந்த நிலையில் வைத்து, ரவாவை 5 நிமிடம் நன்றாக வறுக்கவும்.
வறுத்த ரவாவை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
ஊறவைத்த ஜவ்வரிசியை ரவா கலவையில் சேர்க்கவும். ஒரு கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.
இப்போது இதனுடன் ஒரு கப் தயிர் சேர்க்கவும். அனைத்தையும் கலக்கவும். கால் கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
ஜவ்வரிசிஇட்லி மாவு தயார்
இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி ஜவ்வரிசி இட்லி மாவை மெதுவாக தட்டுகளில் ஊற்றவும். இட்லி தட்டுகளை ஸ்டீமரில் வைத்து மூடியால் மூடவும். அதை 20 நிமிடங்கள் சமைக்ககவும்.
சூப்பர் சாஃப்ட் ஜவ்வரிசிஇட்லியை தேங்காய் சட்னி அல்லது உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: https://www.21frames.in/homecooking
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil
A Ventuno Production : https://www.ventunotech.com
Date Published | 2025-01-26 08:30:18 |
Likes | 561 |
Views | 19558 |
Duration | 1: |