ஜர்தா | Zarda Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
ஜர்தா | zarda in Tamil
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 3/4 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 3
கேசரி தூள் – 1/4 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு
வால் நட்ஸ்
உலர்ந்த திராட்சை
தண்ணீர்
நெய்
#ஜர்தா #Zarda #SweetRice
செய்முறை
1. முதலில் பாசுமதி அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி வைக்கவும்
2. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் கேசரி பொடி, ஏலக்காய், நெய் சேர்த்து அரிசியை முக்கால் வேக்காட்டிற்கு வேகவைக்கவும்
3. ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி, வால்நட்ஸ், உலர் திராச்சை சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும்
4. அதே கடாயில் முக்கால் பாகம் வெந்த அரிசியை சேர்த்து அதனுடன் நெய், சர்க்கரை வறுத்து வைத்த முந்திரி, வால்நட்ஸ், உலர் திராச்சை சேர்த்து நன்கு கிளறவும்
5. அதை பத்து நிமிடத்திற்கு மூடி வைத்து வேக வைக்கவும்
6. பத்து நிமிடம் கழித்து சுவையான மற்றும் எளிமையான ஜர்தா தயார்
Date Published | 2019-06-01 07:29:29Z |
Likes | 1219 |
Views | 63736 |
Duration | 0:03:39 |