செட் தோசை | Set Dosa Recipe in Tamil #breakfast #dosa #setdosa #dosarecipe #food #cooking
Description :
செட் தோசை | Set Dosa Recipe in Tamil | Breakfast Recipes | Dosa Recipe | @HomeCookingTamil
#செட்தோசை #SetDosaRecipe #BreakfastRecipe #DosaRecipe #homecookingtamil #setdosa #dosa
செட் தோசை
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப் (250 கிராம்)
உளுந்து – 1/4 கப்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
தண்ணீர்
அவல் – 1/4 கப் (125 கிராம்)
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
நெய்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
2. அடுத்து பாத்திரத்தில் அவல் சேர்த்து நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
3. பின்பு ஊறவைத்த பொருட்களை மிக்சியில் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
4. அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
5. புளித்த மாவுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
6. அடுத்து தோசை கல்லை சூடாக்கி மாவை சேர்த்து சுற்றிலும் நெய் ஊற்றி மூடி வைத்து 40 நொடிகள் வேகவிடவும்.
7. பின்பு திருப்பி விட்டு 20 நொடிகள் வேகவிடவும்.
8. அருமையான செட் தோசை தயார்.
Date Published | 2024-09-07 08:30:17 |
Likes | 1118 |
Views | 44741 |
Duration | 59 |