செட்டிநாடு கீரை கூட்டு | Chettinad Keerai Kootu | Spinach | கோவக்காய் வறுவல் | Kovakkai Poriyal
Description :
செட்டிநாடு கீரை கூட்டு | Chettinad Keerai Kootu | Spinach Recipes | கோவக்காய் வறுவல் | Kovakkai Poriyal | Kovakkai Fry in Tamil | Kovakkai Recipes | Lunch Ideas | Healthy Recipes
#செட்டிநாடுகீரைகூட்டு #chettinadkeeraikootu #keerai #kootu #chettinadrecipes #sidedish #keeraigravy #healthyrecipes #keeraikootu #chettinadsamayal #கோவக்காய்வறுவல் #kovakkaivaruval #tamil #dondakayavepudu #ivygourdstirfry #kovakkaiporiyal #kovakkaifry #kovakkairecipe #curry #kovakkai #dondakayafry #homecookingtamil #hemasubramanian #spinach #recipe #healthy #lunch
We also produce these videos in English for everyone to understand
Please check the link and subscribe
Chettinad Keerai Kootu : https://www.youtube.com/watch?v=EnVkWvZCCWE&t=3s
Dondakaya Vepudu: https://youtu.be/yqKWKNQ6X00
Our Other Recipes :
பூசணிக்காய் கூட்டு: https://youtu.be/aGgx2jlu4Gk
பாகற்காய் ப்ரை: https://youtu.be/PkWABwZmZW8
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
செட்டிநாடு கீரை கூட்டு
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு – 1/2 கப்
தண்ணீர்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பசலைக்கீரை – 1 கட்டு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10 நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 கீறியது
உப்பு – 1 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
பூண்டு – 2 பற்கள் தட்டியது
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
செய்முறை
1. பிரஷர் குக்கரில் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
2. பசலைக்கீரையை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் சிறிது வதங்கிய பின் பசலைக்கீரையை சேர்த்து கிளறவும்.
5. 2 நிமிடங்கள் வதங்கிய பின் உப்பு சேர்த்துக் கிளறி வேகவைத்த பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
6. கடாயை மூடி 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
7. தாளிப்பு கரண்டியில் நெய், உளுந்து, கடுகு, தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்து கீரை கூட்டு மீது போடவும்.
கோவக்காய் வறுவல்
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கோவக்காய் – 250 கிராம்
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
வேர்க்கடலை – 1/4 கப்
மசாலா தூள் அரைக்க
துருவிய தேங்காய் – 1/4 கப்
சிவப்பு மிளகாய் – 6
பூண்டு – 5 பற்கள்
உடைத்தகடலை – 2 மேசைக்கரண்டி
செய்முறை
1. கோவக்காயை வறுவல் செய்ய ஒரு மசாலா தூள் அரைக்க ஒரு கடாயில் துருவிய தேங்காய், காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
2. தேங்காயை வறுத்த பின்பு சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸ்சியில் சேர்த்து இதனுடன் பூண்டு, உடைத்தகடலை சேர்த்து தூளாக அரைக்கவும்.
3. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்தவுடன் மெலிதாக நறுக்கிய கோவைக்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
4. கோவக்காய் வதங்கியவுடன் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் அரைத்த மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
5. இறுதியாக வறுத்த வேர்க்கடலை சேர்த்து கோவக்காய் வறுவலை பரிமாறவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2021-03-13 09:00:10 |
Likes | 288 |
Views | 15154 |
Duration | 8:8 |