செட்டிநாடு காளான் பிரியாணி | Chettinad Kalan Biryani Recipe In Tamil | #shorts
Description :
செட்டிநாடு காளான் பிரியாணி | Chettinad Kalan Biryani Recipe In Tamil | #shorts
#kalanbiryani #shorts #mushroombiryaniintamil #chettinadrecipes #hemasubramanian
செட்டிநாடு காளான் பிரியாணி
தேவையான பொருட்கள்
காளானை ஊறவைக்க
காளான் – 400 கிராம்
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
சீரக தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW)
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RElrrg)
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3ORaZeY)
தயிர் – 2 மேசைக்கரண்டி
வறுத்த வெங்காயம் – 1/2 கப்
புதினா – 1 கப்
கொத்தமல்லி இலை – 1 கப்
காளான் பிரியாணி செய்ய
பாஸ்மதி அரிசி – 1 கப் (250 மி.லி கப்) (Buy: https://amzn.to/2RD40bC)
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
நெய் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)
பட்டை (Buy: https://amzn.to/2RBvKxw)
கிராம்பு (Buy: https://amzn.to/2RBvKxw)
ஏலக்காய் (Buy: https://amzn.to/2U5Xxrn )
அன்னாசிப்பூ (Buy: https://amzn.to/444NQK8)
பிரியாணி இலை (Buy: https://amzn.to/3s5jhXC)
ஜாவித்ரி (Buy: https://amzn.to/2uLpr1n)
சோம்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3YtGEpL)
வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சைமிளகாய் – 3 கீறியது
தக்காளி – 2 நறுக்கியது
நீர் சேர்த்த தேங்காய் பால் – 2 கப்
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
செய்முறை:
1. காளான்களை கழுவி சுத்தம் செய்யவும். அவற்றை துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
2. பின்பு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர், வறுத்த வெங்காயம், புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கவும்.
3. காளான்களை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
4. அகலமான கடாயை எடுத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும்.
5. பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரயாணி இலை, ஜாவித்ரி, சோம்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
6. கீறிய பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயத்தை நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
7. நறுக்கிய தக்காளி, ஊறவைத்த காளான்களை சேர்த்து, நன்கு கலந்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
8. ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கவும். அதை கடாயில் சேர்க்கவும்.
9. மசாலாவை சரிபார்த்து, தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
10. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து மிதமான தீயில் 20 நிமிடம் வேகவைக்கவும்.
11. பிரியாணியை நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து, ரைத்தா மற்றும் கிரேவியுடன் சூடாக பரிமாறவும்.
Date Published | 2024-05-09 05:29:22 |
Likes | 358 |
Views | 9065 |
Duration | 1: |