செட்டிநாடு இறால் தொக்கு | Chettinad Prawn Thokku Recipe #prawnmasala #prawncurry #shrimp
Description :
செட்டிநாடு இறால் தொக்கு
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சோம்பு – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 2 நறுக்கியது
பச்சை மிளகாய் – 4 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
தக்காளி – 2 நறுக்கியது
உப்பு – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
தண்ணீர் – 1/4 கப்
இறால் – 1 கிலோ
சீரக தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
1.ஒரு அகலமான கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு சேர்த்து கலந்து விடவும்.
2. கடுகு பொறிய ஆரம்பித்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
3. அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து விடவும்.
4. பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து 5 நிமிடம் அதிக தீயில் நன்கு வதக்கவும்.
5. பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
6. தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
7. இப்போது இறாலை சேர்த்து கலந்து விடவும்.
8. சீரக தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
9. தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். பின்பு மிளகு தூள்,கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.
10. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
11. சுவையான செட்டிநாடு இறால் தொக்கு தயார்.
Date Published | 2024-09-15 08:30:02 |
Likes | 919 |
Views | 18371 |
Duration | 59 |