சில்லி கார்லிக் நூடுல்ஸ் | Chilli Garlic Noodles | வெஜ் ஸ்ப்ரிங் ரோல் | Veg Roll @HomeCooking Tamil
Description :
சில்லி கார்லிக் நூடுல்ஸ் | Chilli Garlic Noodles | வெஜ் ஸ்ப்ரிங் ரோல் | Veg Spring Roll | Lunch Combo Recipe | Lunch Box Recipe | Lunch Recipe | @HomeCooking Tamil
#chilligarlicnoodles #vegspringrollrecipe #lunchcomborecipes #lunchrecipes #lunchboxrecipes #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chilli Garlic Noodles: https://youtu.be/fph0wgjuA_M
Veg Spring Roll: https://youtu.be/hheh3DHKe1c
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சில்லி கார்லிக் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்
ஹக்கா நூடுல்ஸ் – 300 கிராம்
தண்ணீர்
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பூண்டு – 1 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது
பெரிய வெங்காயம் – 1 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
கேரட் – 1 கப் பொடியாக நறுக்கியது
முட்டை கோஸ் – 1 கப் பொடியாக நறுக்கியது
மஞ்சள் குடைமிளகாய் – 1/2 பொடியாக நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் – 1/2 பொடியாக நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1/2 பொடியாக நறுக்கியது
வெங்காயத்தாள் வெங்காயம் – பொடியாக நறுக்கியது
வினிகர் – 2 தேக்கரண்டி
சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி
கிரீன் சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
வெங்காயத்தாள் பச்சை
செய்முறை:
1. முதலில் நூடுல்சை வேகவைக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு மற்றும் நூடுல்சை போடவும். நூடுல்ஸ் முக்கால் பாகம் வெந்த பின் அதை வடிகட்டி ஒட்டாமல் இருப்பதற்கு சிறிது எண்ணெய் ஊற்றி பிரட்டி கொள்ளவும்.
2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கிய பின், இதில் கேரட், முட்டைக்கோஸ், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
4. அடுத்து இதில் வினிகர், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், க்ரீன் சில்லி சாஸ், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
5. இதில் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறவும்.
6. கடைசியாக வெங்காயத்தாள் பச்சை பாகத்தை நறுக்கி தூவி இறக்கவும்.
7. சில்லி கார்லிக் நூடுல்ஸ் தயார்.
வெஜ் ஸ்ப்ரிங் ரோல்
தேவையான பொருட்கள்
ஸ்ப்ரிங் ரோல் தாள் தயாரிக்க
மைதா – 1 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
தண்ணீர்
ஸ்ப்ரிங் ரோல் நிரப்ப
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
இஞ்சி – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
பூண்டு – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
வெங்காயம் – 1 மெல்லியதாக நறுக்கியது
குடைமிளகாய் – 1/2 மெல்லியதாக நறுக்கியது
கேரட் – 1 துருவியது
முட்டைக்கோஸ் – 1 கப் மெல்லியதாக நறுக்கியது
வெங்காய தாள் பொடியாக நறுக்கியது
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு
வினிகர் – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
சில்லி சாஸ் – 1 தேக்கரண்டி
பேஸ்ட் தயாரிக்க
மைதா – 2 மேசைக்கரண்டி
தண்ணீர்
செய்முறை:
1. முதலில் ஸ்ப்ரிங் ரோல் தாளை தயாரிக்க வேண்டும்.
2. ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவாக பிசைய வேண்டும்.
3. மாவை மிருதுவாக பிசைந்த பின்னர் ஒரு ஈரத்துணியால் முப்பது நிமிடம் மூடி வைக்கவும்.
4. அடுத்து ஸ்ப்ரிங் ரோலை நிரப்ப, ஒரு கடாயில் எண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, மெல்லிதாக நறுக்கிய வெங்காயம், மெல்லிதாக நறுக்கிய குடை மிளகாய், துருவிய கேரட், மெல்லிதாக நறுக்கிய முட்டை கோஸ், சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
5. சிறிது நேரம் வதக்கிய பின்பு தேவையான அளவு உப்பு, மிளகு தூள், வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து நன்கு வதக்கவும்.
6. தற்போது ஸ்ப்ரிங் ரோல் நிரப்புவதற்கான கலவை தயார்.
7. இப்போது ஏற்கனவே மூடிவைத்துள்ள மாவை எடுத்து மெல்லிதாக தேய்க்கவும்.
8. தேய்த்து வைத்துள்ள மாவை சதுரமாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
9. இந்த ஸ்ப்ரிங் ரோல் தாளில் வதக்கிய கலவையை நடுவில் வைத்து சுருட்டி வைக்கவும்.
10. அதன் ஓரங்களை ஒட்ட மைதா, தண்ணீர் சேர்த்து ஒரு பசையை தயார் செய்யவும்.
11. அந்த சுருளை முழுவதும் ஒட்டிய பின்பு சூடேறிய எண்ணையில் சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
12. இப்போது வெஜ் ஸ்ப்ரிங் ரோல் தயார் இதை சில்லி சாஸ் அல்லது தக்காளி கெட்சப் தொட்டு சாப்பிடவும்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-06-10 09:00:00 |
Likes | 172 |
Views | 11406 |
Duration | 8:34 |