சில்லி கார்லிக் நூடுல்ஸ் | Chilli Garlic Noodles recipe in Tamil

சில்லி கார்லிக் நூடுல்ஸ் | Chilli Garlic Noodles recipe in Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

சில்லி கார்லிக் நூடுல்ஸ்

தயாரிப்பு நேரம் – 20நிமிடங்கள்
சமையல் நேரம் – 15 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

ஹக்கா நூடுல்ஸ்- 300 கிராம்
தண்ணீர்
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பூண்டு – 1 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது
பெரிய வெங்காயம் – 1 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் -2 பொடியாக நறுக்கியது
கேரட் – 1 கப் பொடியாக நறுக்கியது
முட்டை கோஸ் – 1 கப் பொடியாக நறுக்கியது
மஞ்சள் குடைமிளகாய் – 1/2 பொடியாக நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் – 1/2 பொடியாக நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1/2 பொடியாக நறுக்கியது
வெங்காயத்தாள் வெங்காயம் – பொடியாக நறுக்கியது
வினிகர் – 2 தேக்கரண்டி
சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி
கிரீன் சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
வெங்காயத்தாள் பச்சை

செய்முறை
1. முதலில் நூடுல்சை வேகவைக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு மற்றும் நூடுல்சை போடவும். நூடுல்ஸ் முக்கால் பாகம் வெந்த பின் அதை வடிகட்டி ஒட்டாமல் இருப்பதற்கு சிறிது எண்ணெய் ஊற்றி பிரட்டி கொள்ளவும்.
2. அடுத்த ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கிய பின், இதில் கேரட், முட்டைக்கோஸ், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
4. அடுத்து இதில் வினிகர், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், க்ரீன் சில்லி சாஸ், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
5. இதில் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறவும்.
6. கடைசியாக வெங்காயத்தாள் பச்சை பாகத்தை நறுக்கி தூவி இறக்கவும்.
7. சில்லி கார்லிக் நூடுல்ஸ் தயார்.

#சில்லிகார்லிக்நூடுல்ஸ் #ChilliGarlicNoodles #NoodlesRecipe
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com


Rated 4.92

Date Published 2019-03-20 07:36:02Z
Likes 833
Views 50640
Duration 0:03:24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..