சின்ன வெங்காய குழம்பு | Kulambu recipe in home cooking Tamil || Shallots Curry@HomeCooking Tamil
Description :
சின்ன வெங்காய குழம்பு | Shallots Curry In Tamil | Kerala Style Curry Recipes | Kerala recipes | Sidedish Recipes |
#shallotcurry #சின்னவெங்காயகுழம்பு #chinnavengayakulambu #chinnavengayasambar #sidedishrecipes #sidedishforrice #sidedishes #ullitheeyal #keralastyleullitheeyal #keralarecipes #keraladishes #howtomakeullitheeyal #kulamburecipes #curryrecipesintamil #homecooking #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Ulli Theeyal ( Shallots Curry ): https://youtu.be/ta4WbNoUB14
Our Other Recipes:
தாமரை விதைகள் கறி: https://youtu.be/uNw6vnDTkKU
தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா: https://youtu.be/JVv-UwfXowI
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சின்ன வெங்காய குழம்பு
தேவையான பொருட்கள்
மசாலா தூள் அரைக்க
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
தனியா – 2 மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 8
துருவிய தேங்காய் – 1/2 கப்
சின்ன வெங்காய குழம்பு செய்ய
நெய் – 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 1 கப் நறுக்கியது
கறிவேப்பிலை
முழு சின்ன வெங்காயம்
பூண்டு (விரும்பினால்)
அரைத்த மசாலா தூள் – 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கெட்டியான புளி கரைசல் – 1/2 கப்
தண்ணீர்
உப்பு – தேவையான அளவு
நீர் சேர்த்த தேங்காய் பால் – 1 கப்
கெட்டியான தேங்காய்ப்பால் – 1 கப்
செய்முறை:
தேங்காய் பால் செய்ய
1. தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும் அல்லது துருவவும்.
2. மெல்லியதாக துருவிய அல்லது அரைத்த தேங்காயை எடுத்து, ஒரு சுத்தமான மஸ்லின் துணியைப் பயன்படுத்தி வடிகட்டி வைக்கவும். இது முதல் தேங்காய் பால். (கெட்டியான தேங்காய் பால்)
3. இப்போது, தேங்காயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்கவும். இது இரண்டாவது நீர்த்த தேங்காய் பால். தேங்காயிலிருந்து அனைத்து பாலும் வடியும் வரை மீண்டும் செய்யவும்.
மசாலா தூள் அரைக்க
1. ஒரு அகலமான கடாயை எடுத்து சிறிது எண்ணெய் ஊற்றி தனியாவை சேர்த்து பொன் நிறமாக மாறும் வரை வறுக்கவும்.
2. இப்போது சிவப்பு மிளகாயை சேர்த்து வறுக்கவும்.
3. அடுத்து கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, துருவிய தேங்காயை வறுக்கவும்.
4. வறுத்த பொருட்கள் ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து தூளாக அரைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
சின்ன வெங்காய குழம்பு செய்ய:
1. அகலமான கடாயில் நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு மற்றும் கடுகு சேர்க்கவும்.
2. கடுகு பொரிந்தவுடன், மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அடுத்து கறிவேப்பிலை, முழு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு (விரும்பினால்) சேர்க்கவும். வெங்காயம் பொன் நிறமாக மாறும் வரை வதக்கவும்.
3. இப்போது, கடாயில் அரைத்த மசாலா தூளை சேர்த்து நன்கு கலக்கவும்.
4. பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கெட்டியான புளி கரைசல் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
5. பிறகு சிறிது உப்பு சேர்த்து, சுமார் 10 நிமிடம் கொதிக்க விடவும்.
6. இப்போது, தீயை குறைவாக வைத்து, நீர்த்த தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
7. ஒரு நிமிடம் கழித்து கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து மெதுவாக கிளறவும்.
8. தேங்காய் பால் சேர்த்த பிறகு கொதிக்க விட வேண்டாம். அடுப்பை அணைக்கவும்.
9. சின்ன வெங்காய குழம்பு தயார்.
In this video we are going to see one of the famous and tasty kulambu recipe in Tamil which is made with coconut milk and small onions , it will be a perfect dish with hot rice and everyone will love it, Making of this recipe is very simple , easy and quick with limited steps , if you follow the video as it is best kulambu you can serve, Hope you try this yummy recipe at your home and enjoy.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR TAMIL RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-02-22 09:00:00 |
Likes | 335 |
Views | 17504 |
Duration | 3:53 |