சிக்கன் போண்டா | Chicken Bonda Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
சிக்கன் போண்டா | Chicken Bonda in tamil
தேவையான பொருட்கள்
சிக்கன் மசாலா செய்ய
தண்ணீர்
சிக்கன் – 200 கிராம்
உருளைகிழங்கு – 1 நறுக்கியது
உப்பு – தேவைக்கு ஏற்ப
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சீரகம் தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
மாவு தயாரிக்க
கடலை மாவு – 1 1/2 கப்
அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை
1. பிரஷர் குக்கரில் சிக்கன் துண்டுகள், தோல் சீவிய உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி குக்கரை மூடி மிதமான சூட்டில் 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
2. சிக்கன் வெந்தவுடன் அதை குக்கரிலிருந்து எடுத்து வைத்து, ஆறிய பிறகு, சிக்கனை துண்டுகளை எலும்பு நீக்கி உதிர்த்துக் கொள்ளவும்.
3. போண்டா மசாலா செய்ய, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அதில் சிக்கன் உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து கிளறவும்.
5. அடுத்த இதில் தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறி, சிக்கன் வேக வைத்த தண்ணீரையும் ஊற்றி கிளறவும்.
6. தண்ணீர் முழுவதும் வற்றி பிறகு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்கவும்.
சிக்கன் கிழங்கு மசாலா தயார்.
7. அடுத்து போண்டா மாவு கரைக்க, ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
8. போண்டாவை பொரிப்பதற்கு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும்.
9. அடுத்து சிக்கன் கலவையை உருண்டைகளாக பிடித்து, கரைத்த மாவில் முக்கி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை மிதமான சூட்டில் பொரிக்கவும்.
10. அருமையான சிக்கன் போண்டா தயார்.
#சிக்கன்போண்டா #ChickenBonda #Bonda
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoH…
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : http://www.ventunotech.com
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store – https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-07-31 07:30:01Z |
Likes | 604 |
Views | 28434 |
Duration | 0:04:49 |
Nice
I am going to try this weekend
Super I will try
Different recipe
Super men chicken bonda thankyou mem
Chicken Bonda….yummy…..
Nandri
super sister
How can i get ur cooking book
Very nice mam
Super bonda.nice nice
Super mam