சிக்கன் பொடிமாஸ் | Chicken Podimas Recipe in Tamil

சிக்கன் பொடிமாஸ் | Chicken Podimas Recipe in Tamil

Description :

சிக்கன் பொடிமாஸ் | Chicken Podimas

தயாரிப்பு நேரம் – 15 நிமிடங்கள்
சமையல் நேரம் – 20 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது )
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது )
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
முட்டை – 2
கறிவேப்பிலை
நல்லெண்ணெய்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
சோம்பு
உப்பு

சிக்கன் சமைக்க

சிக்கன் – 300 கிராம்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/4 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர்

#சிக்கன்பொடிமாஸ் #ChickenPodimas #podimas

செய்முறை

1. முதலில் சிக்கனை வேக வைக்க, குக்கரில் சிக்கன் துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்
2. சிக்கன் வெந்த பிறகு குக்கரில் மீதமுள்ள வேகவைத்த சிக்கன் தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்
3. வெந்த சிக்கன் துண்டுகளை சிறிது நேரம் ஆற வைத்துவிட்டு சிக்கன் துண்டுகளை சிறிது சிறிதாக பிய்த்து வைத்துக்கொள்ளவும்
4. பின்பு ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும்
5. சூடேற்றப்பட்ட எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை சேர்க்கவும்
6. அதன் பிறகு பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொன்னிறமாகும் வரை வதக்கவும்
7. அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்
8. மூன்று நிமிடம் கழித்து வேகவைத்த சிக்கன் தண்ணீரை கடாயில் சேர்த்து வதக்கியவற்றுடன் கலக்கவும்
9. இப்பொழுது பிய்த்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை கடாயில் சேர்த்து மசாலாவுடன் நன்கு கலக்கவும்
10.கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு இரண்டு முட்டைகளை உடைத்து சிக்கனுடன் சேர்த்து வதக்கவும்
11. ஐந்து நிமிடம் கழித்து சிக்கன் பொடிமாஸ் தயார்
12. சிக்கன் பொடிமாஸை தனியாகவும் சாப்பிடலாம் அல்லது சாம்பார் சாதத்துடனும், ரசம் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOME COOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production: http://www.ventunotech.com


Rated 4.93

Date Published 2019-02-04 11:00:01Z
Likes 332
Views 14349
Duration 0:03:08

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..