சிக்கன் நெய் ரோஸ்ட் | Chicken Ghee Roast In Tamil | முட்டை மிளகு மசாலா | Spicy Egg Pepper Masala |
Description :
சிக்கன் நெய் ரோஸ்ட் | Chicken Ghee Roast In Tamil | முட்டை மிளகு மசாலா | Spicy Egg Pepper Masala In Tamil | Sidedish Recipes | Nonveg Sidedish Recipes |
#சிக்கன்நெய்ரோஸ்ட் #chickengheeroast #mangaloreanchickenroast #chickenroast
#chickenrecipe #nonvegsidedish #chicken #eggpeppermasala #முட்டைமிளகுமசாலா #eggrecipes #eggsidedish #egg #Spicyeggpeppermasala #nonvegsidedish #hemasubramanian #homecookingtamil
Chapters:
Promo – 00:00
Intro – 00:12
Chicken Ghee Roast – 00:37
Spicy Egg Pepper Masala – 06:04
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Ghee Roast: https://www.youtube.com/watch?v=00Sgta1XFf8
Egg Pepper Masala: https://www.youtube.com/watch?v=okkSrdf7-qg
சிக்கன் நெய் ரோஸ்ட்
தேவையான பொருட்கள்
சிக்கன்’னை ஊறவைக்க
சிக்கன் – 1 கிலோ
எலுமிச்சைபழச்சாறு – 1 பழம்
கெட்டி தயிர் – 1 மேசைக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மசாலா விழுது அரைக்க
ப்யாத்கே மிளகாய் – 10
முழு தனியா – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
முழு மிளகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – சிறிதளவு
பூண்டு – 8 பற்கள்
ஊறவைத்த புளி
தண்ணீர்
சிக்கன் நெய் ரோஸ்ட்
நெய் – 6 மேசைக்கரண்டி
ஊறவைத்த சிக்கன்
அரைத்த மசாலா விழுது
தண்ணீர்
வெல்லம் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை
செய்முறை:
சிக்கன்’னை ஊறவைக்க
1. பாத்திரத்தில், சிக்கன், எலுமிச்சைபழச்சாறு, தயிர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசையவும்.
2. இதை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
மசாலா விழுது அரைக்க
3. கடாயில், எண்ணெய் இன்றி, மிளகாய், முழு தனியா, சீரகம், சோம்பு, முழு மிளகு, வெந்தயம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
4. வாசனை வந்ததும், ஆறவிட்டு, மிக்ஸியில் போடவும்.
5. இதனுடன், பூண்டு, ஊறவைத்த புளி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, விழுதாக அரைக்கவும்.
சிக்கன் நெய் ரோஸ்ட் செய்ய
6. அகல பேன்’னில் நெய், ஊறவைத்த சிக்கன் சேர்த்து அதிக தீயில் 10 நிமிடம் கிண்டவும்.
7. சிக்கன் துண்டுகளை எடுத்து வைக்கவும்.
8. பேன்’னில் உள்ள மசாலா நீரை 1 நிமிடம் கொதிக்கவிடவும்
9. இதில் அரைத்த மசாலா விழுது மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
10. இதில் வெல்லம் மற்றும் நெய் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
11. நெய் பிரிய ஆரம்பித்ததும், இதில் எடுத்து வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு, உப்பு சேர்த்து மசாலாவில் ஈரம் வற்றும் வரை, 20 நிமிடம் கிண்டவும்.
12. கடைசியாக இதில் கறிவேப்பில்லை சேர்த்து கிண்டவும்.
13. சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்.
முட்டை மிளகு மசாலா
தேவையான பொருட்கள்
வேகவைத்த முட்டை – 6
தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
வெங்காயம் – 5 மெல்லியதாக நறுக்கியது
இஞ்சி பூண்டு தட்டியது
தக்காளி – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 4 கீறியது
கறிவேப்பில்லை
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 3 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 3 கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. அகல கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, இதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
2. இதில் தட்டிய இஞ்சி பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
3. அடுத்து உப்பு, மிளகு தூள், சீரக தூள் சேர்த்து கிளறவும்
4. இதில் 5 நிமிட இடைவெளியில் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் கடாயை மூடி கொதிக்கவிடவும்
5. அடுத்து நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் முட்டையை சேர்த்து கடாயை மூடி 2 நிமிடம் வேகவைக்கவும்.
6. முட்டையை திருப்பி போட்டு மேலும் 2 நிமிடம் வேகவைக்கவும்.
7. முட்டை மிளகு மசாலா தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Date Published | 2022-01-01 09:00:27 |
Likes | 329 |
Views | 20836 |
Duration | 9:33 |