சிக்கன் சமோசா | Chicken Samosa Recipe in Tamil
Description :
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
சிக்கன் சமோசா | Chicken Samosa in Tamil
தேவையான பொருட்கள்
மாவு தயாரிக்க
மைதா – 1 1/2 கப்
உப்பு
ஓமம் – 1/2 தேக்கரண்டி
நெய் – 3 தேக்கரண்டி
தண்ணீர்
சிக்கன் நிரப்புவதற்கு
எண்ணெய் – 3 தேக்கரண்டி
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
சிக்கன் கொத்துக்கறி – 200 கிராம்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு
சீரகம் தூள் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள்
எண்ணெய்
#சிக்கன்சமோசா #ChickenSamosa #StreetFood
செய்முறை
1. சிக்கன் சமோசா செய்ய முதலில் மாவு தயாரிக்க வேண்டும் அதற்க்கு ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, தேவையான அளவு உப்பு, சிறிது ஓமம், நெய் மற்றும் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்
2. அடுத்து சமோசாவை நிரப்ப ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
3. வெங்காயம் பொன்னிறமானவுடன் சிக்கன் கொத்துக்கறி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு, சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
4. இந்த வதக்கியவற்றில் இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்
5. இந்த கலவையை மிக்ஸியில் சேர்த்து சிறிதாக அரைத்துக்கொள்ளவும்
6. அடுத்து பிசைந்து வாய்த்த மாவை சிறிய உருண்டைகளாக பிரித்து நீல் வட்ட அளவில் தேய்த்து வைத்துக்கொள்ளவும்
7. தேய்த்து வாய்த்த மாவை எடுத்து கூம்பு வடிவில் தயார் செய்யவும். அதன் ஓரங்களை ஒட்ட தண்ணீர் உபயோகப்படுத்தவும்
8. அரைத்து வைத்த சிக்கன் கலவையை சமோசாவில் வைத்து மூடவும் 9. அடுத்து சிக்கன் சமோசாவை பொறிக்க ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடேற்றிய பின்பு சமோசாவை எண்ணையில் சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்
10. எண்ணையை மிதமான தீயில் வைத்து சமோசாவை நன்கு பொரித்து கொள்ளவும்
11. சூடான மற்றும் சுவையான சிக்கன் சமோசா தயார்
Date Published | 2019-06-19 11:30:49Z |
Likes | 508 |
Views | 20983 |
Duration | 0:05:09 |
super sister
Super enna sis neenga pesura language maarittey
Sema
Mam why mix omam?
Thank you sister..
How 2 make chicken koththu mam
You are a great person mam
superb..
chicken filling pudhusu illa..
nenga pudhusa seiringa 😛
unga video dislike panna oru aal ready ah iruku pola.. mostly see that
Vera level
I am your new subscriber u r to good and your dressing so cute mam
Super mam
Innovation level 1000000000000