சிக்கன் ஃப்ரைட் ரைஸ் | Chicken Fried Rice Recipe in Tamil

சிக்கன் ஃப்ரைட் ரைஸ் | Chicken Fried Rice Recipe in Tamil

Description :

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

#சிக்கன்ஃப்ரைட்ரைஸ் #ChickenFriedRice #FriedRice

சிக்கன் ஃப்ரைட் ரைஸ் | Chicken Fried Rice in Tamil

தேவையான பொருட்கள்

சிக்கன் வேகவைக்க

சிக்கன் – 250 கிராம்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – தேவைக்கு ஏற்ப
மிளகு தூள் – தேவைக்கு ஏற்ப
பூண்டு – 4 பற்கள்

அரிசி சமைக்க

பாஸ்மதி அரிசி – 1 கப்
சிக்கன் வேகவைத்த தண்ணீர் – 2 கப்
தண்ணீர் – 1 கப்

ஃப்ரைட் ரைஸ் செய்ய

நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பூண்டு – 2 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
வெங்காயத்தாள் வெங்காயம் – பொடியாக நறுக்கியது
பீன்ஸ் – 1/2 கப் பொடியாக நறுக்கியது
கேரட் – 1/2 கப் பொடியாக நறுக்கியது
குடைமிளகாய் – 1/2 கப் பொடியாக நறுக்கியது
முட்டைக்கோஸ் – 1/2 கப் பொடியாக நறுக்கியது
உப்பு – தேவைக்கு ஏற்ப
மிளகு தூள் – தேவைக்கு ஏற்ப
முட்டை – 3
வெங்காயத்தாள் பச்சை -பொடியாக நறுக்கியது

செய்முறை
1. முதலில் சிக்கனை வேகவைக்க, ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி, எலும்புள்ள சிக்கன் துண்டுகளை போட்டு, இதில் தேவையான அளவு ஒப்பு மற்றும் மிளகு தூள், பூண்டு பற்கள் சேர்த்து வேகவைக்கவும்.
2. சிக்கன் வெந்தவுடன், அதை தனியாக எடுத்து வைத்து, ஆறியபின் அதை சிறு துண்டுகளாக உதிர்த்து கொள்ளவும்.
3. அடுத்து அரிசியை சமைக்க, கூறபடியுள்ள அளவு சிக்கன் வேகவைத்த தண்ணீர் மற்றும் சாதாரண தண்ணீர் கலந்து, பாஸ்மதி அரிசியை நன்கு வேகவைக்கவும்.
4. ஃப்ரைட் ரைஸ் செய்ய, ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, நறுக்கிய பூண்டு, நறுக்கிய இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து வெங்காயத்தாள் வெங்காயம், பீன்ஸ், கேரட், குடைமிளகாய், முட்டைக்கோஸ் சேர்க்கவும். இவை ஒவ்வொன்றும் பொடியாக நறுக்கியவை.
6. காய்காரிகளுக்கு தேவையான அளவு ஒப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
காய்காரிகல் வதங்கியவுடன், அவைகளை கடாயின் ஓரம் தள்ளி, நடுவில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
7. முட்டைகளை மிளகு தூள் சேர்த்து கலக்கி, காய்காரிகளுடன் சேர்த்து வதக்கவும்.
அடுத்து உதிர்த்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
8. இறுதியாக வேகவைத்த சாதம் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் பச்சை தூவி கிளறவும்.
9. சுவையான சிக்கன் ஃப்ரைட் ரைஸ் தயார்.

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoH…
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : http://www.ventunotech.com
Check out this link to buy products that are similar to what I use. Amazon Home Cooking Store – https://www.amazon.in/shop/homecookingshow


Rated 4.86

Date Published 2019-07-21 04:30:01Z
Likes 831
Views 39614
Duration 0:05:31

Article Categories:
Chicken · Rice · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..