சாம்பார் சாதம் | Sambar Sadam Recipe In Tamil | Bisibelebath Recipe | Sambar Rice | Lunchbox Recipe

சாம்பார் சாதம் | Sambar Sadam Recipe In Tamil | Bisibelebath Recipe | Sambar Rice | Lunchbox Recipe

Description :

சாம்பார் சாதம் | Sambar Sadam Recipe In Tamil | Bisibelebath Recipe | Lunch Recipe | Sambar Rice | Lunchbox Recipe | @HomeCooking Tamil |

#sambarsadam #lunchrecipes #bisibelebathrecipe #sambarricerecipe #ricerecipes #lunchideas #sambarsadamintamil #lunchboxrecipes #homecookingtamil #hemasubramanian

Our Other Recipes:
தக்காளி சாதம்: https://youtu.be/Cu1mC_s_uyI
காளான் பிரியாணி: https://youtu.be/zjl3qBUYTVI

Click here to buy fresh fruits and vegetables from Deep Rooted: https://drco.onelink.me/fdWi/7j3vx4ne

Get flat 50% off on your first ever order on deep rooted and an additional 10% off by using our code : DRHC60

சாம்பார் சாதம்
தேவையான பொருட்கள்

அரிசி மற்றும் பருப்பை வேகவைக்க

பச்சரிசி – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
தண்ணீர்
மஞ்சள் தூள்
உப்பு

மசாலா விழுது அரைக்க

எண்ணெய்
கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி
தனியா – 2 மேசைக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 8
தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள்
தண்ணீர்

காய்கறிகளை வேகவைக்க

சின்ன வெங்காயம் – 1 கப்
உருளைக்கிழங்கு – 1 நறுக்கியது
பீன்ஸ் நறுக்கியது
கேரட் நறுக்கியது
முருங்கைக்காய் – 1 நறுக்கியது
கத்தரிக்காய் நறுக்கியது
பட்டாணி – 2 மேசைக்கரண்டி
தக்காளி – 2 நறுக்கியது
உப்பு
தண்ணீர்
அரைத்த மசாலா விழுது
புளி தண்ணீர்
வேகவைத்த அரிசி மற்றும் பருப்பு

தாளிப்பு செய்ய

நெய் – 3 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்
காய்ந்த மிளகாய்
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள்

செய்முறை:
அரிசி மற்றும் பருப்பை வேகவைக்க
1. அரிசி மற்றும் பருப்பை தண்ணீரில் நன்கு கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
2. அடுத்து ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பை ஒரு குக்கரில் சேர்க்கவும்.
3. பின்பு அரிசி மற்றும் பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும்.
4. குக்கரை மூடி 4 விசில் வரும் வரை அரிசி மற்றும் பருப்பை நன்கு வேகவைக்கவும்.
5. அடுத்து வேகவைத்த அரிசி மற்றும் பருப்பை நன்றாக மசித்து தனியாக எடுத்து வைக்கவும்.

மசாலா விழுது அரைக்க
1. ஒரு அகல பானில் எண்ணெய் ஊற்றவும்.
2. எண்ணெய் சூடானதும் கடலை பருப்பை சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும்.
3. சிறிது நேரம் கடலை பருப்பை வருத்ததும் தனியா, மிளகு, சீரகம், சோம்பு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் பொருட்கள் கருகாமல் வறுக்கவும்.
4. இப்போது காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து தேங்காய் துருவல் சிறிது பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
5. பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். அடுப்பை அணைத்து விட்டு வறுத்த பொருட்களை நன்கு ஆறவிடவும்.
6. ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு விழுதாக அரைக்கவும்.
7. அரைத்த மசாலா விழுதை தனியாக எடுத்து வைக்கவும்.

காய்கறிகளை வேகவைக்க
1. காய்கறிகளை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
2. ஒரு ஆழமான கடாயை எடுத்து எண்ணெய் ஊற்றவும். அடுத்து சின்ன வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
3. பின்பு நறுக்கிய உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், முருங்கைக்காய், கத்தரிக்காய், பட்டாணி, தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
4. அடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
5. காய்கறிகளை 2 அல்லது 3 நிமிடம் வேகவைத்த பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
6. கடாயை மூடி காய்கறிகளை 10 நிமிடம் வேகவைக்கவும்.
7. 10 நிமிடத்திற்கு பிறகு அரைத்த மசாலா விழுதை சேர்த்து கலந்து விடவும். 2 அல்லது 3 நிமிடம் வேகவைக்கவும். பிறகு புளி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
8. மீண்டும் கடாயை மூடி காய்கறிகளை 5 நிமிடம் வேகவைக்கவும்.
9. இப்போது வேகவைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்க்கவும்.
10. நன்றாக கலந்து விட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.

தாளிப்பு செய்ய
1. தாளிப்பு கரண்டியை எடுத்து நெய் ஊற்றவும்.
2. கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் ஆகியவற்றை சேர்க்கவும்.
3. கடுகு பொரிந்ததும் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
4. அடுப்பை அணைத்து விடவும்.

சாம்பார் சாதம் செய்ய
1. தாளிப்பை சாம்பார் சாதத்துடன் சேர்த்து மிதமான தீயில் வேகவைக்கவும்.
2. அனைத்தையும் நன்றாக கலந்து விட்டு நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி அலங்கரிக்கவும்.
3. சுவையை கூட்ட மேலே சிறிதளவு நெய் சேர்க்கவும்.
4. சிப்ஸ் அல்லது வத்தல் வைத்து இந்த சுவையான சாம்பார் சாதத்தை நீங்கள் விரும்பும்படி பரிமாறவும்.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-11-24 09:00:34
Likes 458
Views 21876
Duration 11:13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..