சாக்லேட் கேக் | Eggless Chocolate Cake In Pressure Cooker | கஸ்டர்டு கேக் | Custard Cake In Tamil |

சாக்லேட் கேக் | Eggless Chocolate Cake In Pressure Cooker | கஸ்டர்டு கேக் | Custard Cake In Tamil |

Description :

சாக்லேட் கேக் | Eggless Chocolate Cake In Pressure Cooker | கஸ்டர்டு கேக் | Custard Cake In Tamil | Cake Recipes | No Oven Cake |

#chocolatecake #egglesscake #pressurecookerchocolatecake #pressurecookercake #சாக்லேட்கேக் #custardcake #கஸ்டர்டுகேக் #buttercreamcustardfrosting #cakerecipe #noovencake #snackrecipe #dessertrecipes #homecookingtamil #hemasubramanian

Chapters:

Promo – 00:00
Intro – 00:13
Eggless Chocolate Cake In Pressure Cooker – 00:37
Custard Cake – 06:17

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Eggless Chocolate Cake: https://www.youtube.com/watch?v=zRL-FVNXh6c
Custard cake: https://www.youtube.com/watch?v=Pp2ad_o8y4Q

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

பிரஷர் குக்கர் சாக்லேட் கேக்
தேவையான பொருட்கள்

மைதா – 1 1/2 கப்
சர்க்கரை – 1 கப்
கோகோ பவுடர் – 1/4 கப்
பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி

பேக்கிங் சோடா – 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 1/2 கப்
பால் – 1 கப்
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
வெந்நீர் – 1/2 கப்
எண்ணெய்
மைதா

பிரெஷ் கிரீம் – 200 மில்லி

டார்க் சாக்லேட் – 250 கிராம்
சாக்லேட் வேஃபர்ஸ்

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்.
2. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய், பால் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்து மைதா மாவு கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
3. இதில் வெந்நீர் ஊற்றி மற்றுமொருமுறை கலக்கவும்.
4. கேக் செய்யும் பாத்திரத்தில் எல்லா பக்கமும் எண்ணெய் தடவிய பின், சிறிது மைதா மாவு போட்டு எல்லா பக்கமும் தட்டி எடுத்து தயார் செய்து கொள்ளவும்.
5. பிரஷர் குக்கரில் கல்லுப்பு பரப்பி அதன்மேல், ஒரு ஸ்டாண்ட் வைத்து கேக் பாத்திரத்தை உள்ளே வைக்கவும்.
6. பிரஷர் குக்கரை மூடி மிகவும் குறைந்த தீயில் 90 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும்.
7. 90 நிமிடங்கள் கழித்து வெளியில் எடுத்து ஆறவிடவும்.
8. மற்றொரு பாத்திரத்தில் பிரஷ் கிரீம் மற்றும் டார்க் சாக்லேட் போட்டு குறைந்த தீயில் சூடாக்கவும்.
9. சாக்லேட் உருகியதும் அடுப்பிலிருந்து எடுத்து ஆறவிடவும்.
10. ஆறிய கேக்’கின் மீது செய்த சாக்லேட் சாஸ் ஊற்றவும். எல்லா பக்கமும் படும்படி ஊற்றவும்.
11. இறுதியாக சாக்லேட் வேஃபர்ஸ் கொண்டு அலங்கரிக்கவும்.
12. முட்டை இல்லாத சாக்லேட் கேக் தயார்.

கஸ்டர்டு கேக்
மற்றும்
பட்டர்கிரீம் கஸ்டர்டு ப்ராஸ்டிங்
தேவையான பொருட்கள்

கஸ்டர்டு கேக் செய்ய

மைதா – 1 கப்
கஸ்டர்டு பவுடர் (வெண்ணிலா பிளேவர்) – 1/4 கப்
உப்பு – 1/4 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி
சர்க்கரை – 1 கப்
முட்டை – 2
பால் – 1/2 கப் காய்ச்சி ஆறவைத்தது
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
உப்பில்லாத வெண்ணெய் – 150 கிராம்

பட்டர்கிரீம் கஸ்டர்டு ப்ராஸ்டிங் செய்ய

உப்பில்லாத வெண்ணெய் – 150 கிராம்
பொடித்த சர்க்கரை – 300 கிராம்
கஸ்டர்டு பவுடர் (வெண்ணிலா பிளேவர்) – 2 மேசைக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி

செய்முறை:
1. பாத்திரத்தில், மைதா, கஸ்டர்டு பவுடர், உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் சர்க்கரை போட்டு கலக்கவும்.
2. மற்றோரு பாத்திரத்தில் முட்டை, பால், வெண்ணிலா எசென்ஸ், மற்றும் உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
3. கலந்த ரெண்டு கலவையையும் ஒன்றாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
4. கேக் டின்’னை கிரீஸ் செய்து, கேக் கலவையை ஊற்றவும்.
5. குக்கர்’ரில் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 40 நிமிடம் பேக் செய்யவும்.
6. 40 நிமிடம் கழித்து, கேக்’கை வெளியில் எடுத்து ஆறவிடவும்.
7. பட்டர்கிரீம் கஸ்டர்டு ப்ராஸ்டிங் செய்ய, பாத்திரத்தில், உப்பில்லாத வெண்ணெய் போட்டு 1 நிமிடம் பீட் செய்யவும்.
8. இதில் பொடித்த சர்க்கரை, கஸ்டர்டு பவுடர், வெண்ணிலா எசென்ஸ் போட்டு பீட் செய்யவும்.
9. ஆறிய கேக்’கின் மேல் பாகத்தை நீக்கவும்
10. ஃப்ராஸ்டிங்’கை, கேக்’கின் அனைத்து பக்கங்களிலும் தடவவும்.
11. ப்ராஸ்டிங்’கால் அலங்கரிக்கவும்.
12. கஸ்டர்டு கேக் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-01-02 09:00:30
Likes 289
Views 22883
Duration 10:40

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..