கோவக்காய் வறுவல் | Kovakkai Varuval recipe in Tamil
Description :
கோவக்காய் வறுவல் | Kovakkai Varuval recipe in Tamil | Kovakkai Varuval | kovakkai poriyal | kovakkai fry andhra style | Dondakaya Vepudu. | Ivy Gourd Stir Fry
English version of this recipe : https://youtu.be/yqKWKNQ6X00
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கோவக்காய் – 250 கிராம்
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
வேர்க்கடலை – 1/4 கப்
மசாலா தூள் அரைக்க
துருவிய தேங்காய் – 1/4 கப்
சிவப்பு மிளகாய் – 6
பூண்டு – 5 பற்கள்
பொட்டுக்கடலை – 2 மேசைக்கரண்டி
#DondakayaVepudu #ivygourdstirfry #கோவக்காய்வறுவல்
செய்முறை
1. கோவக்காய் வறுவல் செய்ய ஒரு மசாலா தூள் அரைக்க ஒரு கடாயில் துருவிய தேங்காய், காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
2. தேங்காயை வறுத்த பின்பு சிறிது நேரம் ஆறவிட்டு மிஸ்சியில் சேர்த்து இதனுடன் பூண்டு, பொட்டுக்கடலை சேர்த்து தூளாக அரைக்கவும்
3. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்தவுடன் மெலிதாக நறுக்கிய கோவைக்காயை மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
4. கோவக்காய் வதங்கியவுடன் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் அரைத்த மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
5. இறுதியாக வறுத்த வேர்க்கடலை சேர்த்து கோவக்காய் வறுவலை பரிமாறவும்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingTamil
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
Date Published | 2019-11-19 11:30:00Z |
Likes | 2393 |
Views | 163628 |
Duration | 0:04:20 |