கொண்டைக்கடலை கபாப் | Veg Shammi Kebab In Tamil | சாப்லி கபாப் | Chapli Kabab | Starter Recipes |

கொண்டைக்கடலை கபாப் | Veg Shammi Kebab In Tamil | சாப்லி கபாப் | Chapli Kabab | Starter Recipes |

Description :

கொண்டைக்கடலை கபாப் | Veg Shammi Kebab In Tamil | சாப்லி கபாப் | Chapli Kabab In Tamil | Starter Recipes | Kabab Recipes | Snack Recipes | Healthy Recipes | Healthy Snacks |

#vegshammikebab #kondakadalaikabab #கொண்டைக்கடலைகபாப் #starterrecipe
#starter #vegstarter #snacks #eveningsnacks #kidsspecial #healthyfood
#healthysnacks #kabulichana #kabulichanakebab #சாப்லிகபாப் #chaplikabab #muttonchaplikabab #kababrecipes #healthysnacks #healthyrecipes #snackrecipes #chaplikababrecipe #peshawarichappalkabab #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Veg Shammi Kebab: https://www.youtube.com/watch?v=wmz84RUTkEo
Chapli Kebab: https://www.youtube.com/watch?v=T4Lic5IUXVk&t=102s

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கொண்டைக்கடலை கபாப்
தேவையான பொருட்கள்

கருப்பு கொண்டைக்கடலை – 1 கப்
(ஓர் இரவு ஊறியது)
தண்ணீர்
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
புதினா இலை நறுக்கியது
கடலை மாவு – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய்

தயிர் பச்சடி செய்ய

தயிர் – 1 கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது
புதினா இலை நறுக்கியது
சில்லி ஃபிளேக்ஸ் – 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு – 1/2 பழம்

செய்முறை:
1. கொண்டைக்கடலையை ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
2. பிரஷர் குக்கர்’ரில் போட்டு 6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
3. வெந்த கடலையை வடிகட்டி வைக்கவும்.
4. மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும்.
5. இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, புதினா இலை, கடலை மாவு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
6. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். (கடலை வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும்)
7. நன்கு பிசைந்து வடை போல் தட்டவும்.
8. தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
9. கபாப்’பை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
10. அடுத்து தயிர் பச்சடி செய்ய, கிண்ணத்தில் தயிர், கொத்தமல்லி இலை, புதினா இலை, பச்சை மிளகாய், சாட் மசாலா, சில்லி ஃபிளேக்ஸ் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலக்கவும்.
11. தயிர் பச்சடியை குளிரூட்டி பரிமாறவும்.

சாப்லி கபாப்
தேவையான பொருட்கள்

மட்டன் கொத்து – 1/2 கிலோ
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தட்டிய தனியா – 1 தேக்கரண்டி
தட்டிய சீரகம் – 1 தேக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1 பழம்
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
பூண்டு – 1 தேக்கரண்டி நறுக்கியது
இஞ்சி – 1 தேக்கரண்டி நறுக்கியது
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
தக்காளி – 1 விதை நீக்கி நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
முட்டை – 1
சோள மாவு – 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை:
1. முழு தனியாவை கொர கொரப்பாக தட்டவும். சீரகத்தை கொர கொரப்பாக தட்டவும்.
2. பாத்திரத்தில் மட்டன் கொத்து, உப்பு, மிளகாய் தூள், தட்டிய தனியா, தட்டிய சீரகம், சில்லி பிளேக்ஸ், எலுமிச்சைபழச்சாறு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், தக்காளி சேர்க்கவும்.
3. அடுத்து இதில் கொத்தமல்லி இலை, முட்டை, சோள மாவு, கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு பிசைந்து கலக்கவும்.
4. சிறிய வடை போல் தட்டி, எண்ணையில் பொரிக்கவும்.
5. ஒவ்வொரு பக்கமும், 5 நிமிடம் பொரிக்கவும்.
6. பொன்னிறமானதும் எடுக்கவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingt

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2021-12-05 09:00:18
Likes 404
Views 33490
Duration 8:21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..