கொங்குநாடு வெள்ளை பிரியாணி | Kongunadu Vellai Biryani Recipe In Tamil #biryani #briyani #shorts

கொங்குநாடு வெள்ளை பிரியாணி | Kongunadu Vellai Biryani Recipe In Tamil #biryani #briyani #shorts

Description :

கொங்குநாடு வெள்ளை பிரியாணி | Kongunadu Vellai Biryani Recipe In Tamil

#biryani #briyani #shorts #kongunaduvellaibiryanirecipeintamil #whitebiryani #biryanirecipeintamil #hemasubramanian

கொங்குநாடு வெள்ளை பிரியாணி
தேவையான பொருட்கள்

மசாலா விழுது அரைக்க

சின்ன வெங்காயம் – 20
பூண்டு – 12 பற்கள்
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 4
சோம்பு – 1 தேக்கரண்டி
ஏலக்காய் – 3
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 4
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர்
தயிர் – 2 மேசைக்கரண்டி

பிரியாணி செய்ய

சீரகசம்பா அரிசி – 1/2 கிலோ
மட்டன் – 1 கிலோ
நெய் – 2 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பிரியாணி இலை – 2
பட்டை – 1 துண்டு
அன்னாசிப்பூ
ஏலக்காய் – 3
கல்பாசி – 3 துண்டு
மராத்தி மொக்கு – 2
ஜாவித்ரி
கிராம்பு – 5
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 கீறியது
புதினா – 1/2 கட்டு
கொத்தமல்லி – 1/2 கட்டு
தண்ணீர் – 3 கப் (250 மி.லி கப்)
எலுமிச்சைபழச்சாறு – 1 பழம்

செய்முறை:
1. சீரகசம்பா அரிசியை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
2. மசாலா விழுது அரைக்க மிக்ஸியில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, உப்பு, மற்றும் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
3. மட்டனுடன் அரைத்த மசாலா விழுது, தயிர் சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.
4. குக்கரில் நெய், நல்லெண்ணெய், பிரியாணி இலை, பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய், கல்பாசி, மராத்தி மொக்கு, ஜாவித்ரி, கிராம்பு சேர்த்து வறுக்கவும்.
5. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
6. பின்பு ஊறவைத்த மட்டனை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
7. பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு குக்கரை மூடி மிதமான தீயில் 6 விசில் வரும் வரை வேகவிடவும்.
8. அடுத்து குக்கரை திறந்து ஊறவைத்த சீரகசம்பா அரிசியை சேர்த்து கலந்து விட்டு எலுமிச்சைபழச்சாறை சேர்த்து மீண்டும் கலக்கவும்.
9. ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும். பின்பு அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடம் தம்மில் வைக்கவும்.
10. சுவையான கொங்குநாடு வெள்ளை பிரியாணி தயார்.

Kongunadu Vella Biryani is a special dish in comibatore region. Like the name itself suggests, this biryani is white in color with minimum amount of spices/masalas. This biryani can be made with either chicken or mutton. But in this recipe, you watch the method of making Kongunadu Vellai Mutton Biryani with soft and tender mutton. There are few techniques to cook mutton perfectly. So watch the video till the end to get a step by step guidance. This biryani can be enjoyed by everyone who likes mild, subtle tasting food. So try this biryani and enjoy with mirchi ka salan, kathirikai biryani gravy or simple raitha by the side.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES


Rated 5.00

Date Published 2024-06-15 08:43:50
Likes 942
Views 22803
Duration 54

Article Categories:
Biryani Recipes · Rice · South Indian · Tamil · Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..