காளான் மட்டர் சப்ஜி | Mushroom Matar Sabji Recipe in Tamil | Mushroom Masala
Description :
காளான் மட்டர் சப்ஜி | Mushroom Matar Sabji Recipe in Tamil | Mushroom Masala
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
தேவையான பொருட்கள்
காளான் – 400 கிராம்
பச்சை பட்டாணி – 1/2 கப்
முந்திரி பருப்பு – 10
தக்காளி – 3
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
இலவங்கப்பட்டை, கிராம்பு & ஏலக்காய்
மிளகு
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு – 1 தேக்கரண்டி ( நறுக்கிய )
இஞ்சி – 1 தேக்கரண்டி ( நறுக்கிய )
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 2
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
கஷ்மீரி சில்லி பவுடர் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
பிரெஷ் கிரீம் – 1 மேசைக்கரண்டி
கொத்துமல்லி தழை
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1 கப்
#காளான்மட்டர்சப்ஜி #MushroomRecipe #MushroomMatarSabji
செய்முறை
1. காளான் மட்டர் சப்ஜி செய்வதற்கு முதலில் காளான்களை எடுத்து சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
2. ஒரு கிண்ணத்தில் பத்து முந்திரிப்பருப்பை தண்ணீருடன் சேர்த்து முப்பது நிமிடம் ஊறவைக்கவும்
3. ஒரு பாத்திரத்தில் மூன்று தக்காளி, அதனுடன் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்
4. அடுத்து மிக்ஸியில் வேகவைத்த தக்காளி, ஊறவைத்த முந்திரி பருப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்
5. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
6. வெங்காயம் பொன்னிறமானவுடன் அரைத்த தக்காளி முந்திரி விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்
7. இந்த கலவையில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
8. இதனுடன் வேகவைத்த பச்சை பட்டாணி, நறுக்கிய காளான் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்
9. பத்து நிமிடம் கழித்து இதில் கரம் மசாலா தூள், பிரெஷ் கிரீம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்
10. சூடான மற்றும் மிகவும் சுவையான காளான் மட்டர் சப்ஜி தாயார்
You can buy our book and classes on http://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/HomeCookingShow
YOUTUBE: https://www.youtube.com/user/VentunoHomeCooking
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow
A Ventuno Production : http://www.ventunotech.com
Date Published | 2019-09-19 11:30:00Z |
Likes | 912 |
Views | 40648 |
Duration | 0:04:00 |