கல் தோசை | Kal Dosa In Tamil | மட்டன் கறிக்குழம்பு | Mutton Kulambu In Tamil | Breakfast Recipe |

கல் தோசை | Kal Dosa In Tamil | மட்டன் கறிக்குழம்பு | Mutton Kulambu In Tamil | Breakfast Recipe |

Description :

கல் தோசை | Kal Dosa In Tamil | மட்டன் கறிக்குழம்பு | Mutton Kulambu In Tamil | Breakfast Recipe | Dinner Recipe |

#கல்தோசை #kaldosai #dosarecipes #dosai #kaldosa #dosa #மட்டன்கறிக்குழம்பு #muttoncurry #claypotmuttoncurry #muttonrecipes #mutton #breakfastrecipes #dinnerrecipes #nonveggravy #muttongravy #muttonmasala #tiffinrecipes #tiffin #sidedishrecipes #sidedishfordosa #sidedishforrice #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Kal Dosa: https://www.youtube.com/watch?v=Wwi9mGTsI4E&t=20s
Mutton Kulambu: https://youtu.be/–vOpqHjYZc

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

கல் தோசை
தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு – 1/2 கப்
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
பச்சரிசி – 1 கப்
இட்லி அரிசி – 1 கப்
தேவையான அளவு உப்பு
எண்ணெய்

செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் தண்ணீர் சேர்த்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. மற்றொரு கிண்ணத்தில் பச்சரிசி, இட்லி அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
3. ஊற வைத்த உளுத்தம் பருப்பையும், வெந்தயத்தையும் மிக்ஸியில் நன்கு மை போல் அரைக்கவும்.
4. ஊறவைத்த அரிசிகளையும் நன்கு மை போல் அரைக்கவும்.
5. அரைத்த அரிசி மாவுடன் அரைத்த உளுத்தம் பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
6. தயாரான மாவை தோசை கல்லில் ஊற்றி சிறிதளவு எண்ணெய் சேர்த்து இருபக்கமும் பொன்னிறம் வரும் வரை வேகவைக்கவும்.
7. சூடான கல் தோசை தயார்.

மட்டன் கறிக்குழம்பு
தேவையான பொருட்கள்

மசாலா விழுது அரைக்க

எண்ணெய் – 1 தேக்கரண்டி
மல்லி விதைகள் – 1 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 10
சிறிய வெங்காயம் – 12
பூண்டு – 8 பற்கள்
இஞ்சி – 1 துண்டு
துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
தண்ணீர்

மட்டன் கறிக்குழம்பு செய்ய

மட்டன் – 1 கிலோ
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் அன்னாசி பூ
சிறிய வெங்காயம் – 20
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை
தக்காளி – 4
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கல் உப்பு – 1 மேசைக்கரண்டி

செய்முறை:
1. மட்டன் கறிக்குழம்பு செய்வதற்கு முதலில் மசாலா விழுது அரைக்க வேண்டும், அதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடேற்றிய பின்பு இதில் மல்லி விதை, சீரகம், மிளகு, சோம்பு, காய்ந்த சிவப்பு மிளகாய், சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வறுக்கவும்.
2. நறுமணம் வரை வறுத்த பின்பு சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் இல்லாமலும் மறுமுறை சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
3. மட்டன் கறிக்குழம்பு செய்வதற்கு ஒரு மண் சட்டியை சூடு செய்து அதில் நல்லெண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, நறுக்கிய சிறிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நீளமாக கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகவும் வரை வதக்கவும்.
4. வெங்காயம் பொன்னிறமானவுடன் இதனுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து தக்காளியை நன்கு மசிக்கவும்.
5. தக்காளி நன்கு மசித்தவுடன் இதில் மட்டன் துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடம் கிளறவும்.
6. இந்த மட்டன் கலவையில் அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்கு கிளறவும்.
7. அடுத்து இந்த மட்டன் துண்டுகளை எளிதாக வேகவைக்க சுடுதண்ணீர் சேர்த்து மண் சட்டியை மூடி ஒரு மணி நேரம் கொதிக்கவிடவும்.
8. ஒரு மணி நேரம் கழித்து இதில் கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.
9. சுவையான மற்றும் மண் மனம் மாறாத மட்டன் கறிக்குழம்பு தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK –https://www.facebook.com/homecookingtamil/

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 4.88

Date Published 2021-11-06 09:00:30
Likes 407
Views 34669
Duration 8:12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..