இறால் பிரியாணி | Prawn Biryani | சிக்கன் நெய் ரோஸ்ட் | Chicken Ghee Roast | @HomeCooking Tamil

இறால் பிரியாணி | Prawn Biryani | சிக்கன் நெய் ரோஸ்ட் | Chicken Ghee Roast | @HomeCooking Tamil

Description :

இறால் பிரியாணி | Prawn Biryani | சிக்கன் நெய் ரோஸ்ட் | Chicken Ghee Roast | Lunch Combo Recipes | Lunch Recipes |

#prawnsbiryani #chickengheeroast #homecookingtamil

Check out these recipes In English:
Prawn Biryani: https://www.youtube.com/watch?v=j1gQVbMZMTE
Chicken Ghee Roast: https://www.youtube.com/watch?v=00Sgta1XFf8

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

இறால் பிரியாணி
தேவையான பொருட்கள்

இறால் – 1 கிலோ
பாஸ்மதி அரிசி – 2 கப்
நெய் – 3 மேசைக்கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
பிரியாணி இலை
அன்னாசி பூ
வெங்காயம் – 4 நீளமாக நறுக்கியது
தக்காளி – 3 நறுக்கியது
உப்பு
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
புதினா இலை
தேங்காய் பால் – 2 கப் நீர் சேர்த்தது
தண்ணீர்

மசாலா விழுது அரைக்க

பூண்டு – 12 பற்கள்
இஞ்சி – 2 இன்ச் துண்டு நறுக்கியது
சின்ன வெங்காயம் – 10
துருவிய தேங்காய் – 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 4
காய்ந்த மிளகாய் – 5
புதினா இலை
கொத்தமல்லி இலை
தண்ணீர்

செய்முறை:
1. பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
2. இறால்’லை சுத்தம் செய்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு கழுவவும்.
3. சுத்தம் செய்த இறால்’லை, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து ஊறவைக்கவும்.
4. மிக்ஸியில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து, நன்கு விழுதாக அரைக்கவும்.
5. தேங்காயை அரைத்து, பிரியாணி’க்கு தேவையான தேங்காய் பால் தயார் செய்யவும்.
6. பிரஷர் குக்கர்’ரில், நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
7. வெங்காயம் பொன் நிறமானதும், அரைத்த மசாலா விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
8. அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
9. தக்காளி நன்கு மசிந்த பின், இதில் உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
10. அடுத்து இதில் ஊறவைத்த இறால் சேர்த்து கிண்டவும்.
11. குறைந்த தீயில், தேங்காய் பால் ஊற்றி கிளறவும்.
12. அடுத்து இதில் ஊறவைத்த அரிசி சேர்த்து கிண்டவும்.
13. குக்கர்’ரை மூடி, ஆவி வந்ததும், வெயிட் போட்டு 8 நிமிடம் வேகவைக்கவும்.
14. குக்கர்’ரின் பிரஷர் இறங்கியதும், திறக்கவும்.
15. சுவையான இறால் பிரியாணி தயார்.

சிக்கன் நெய் ரோஸ்ட்
தேவையான பொருட்கள்

சிக்கன்’னை ஊறவைக்க

சிக்கன் – 1 கிலோ
எலுமிச்சைபழச்சாறு – 1 பழம்
கெட்டி தயிர் – 1 மேசைக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

மசாலா விழுது அரைக்க

ப்யாத்கே மிளகாய் – 10
முழு தனியா – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
முழு மிளகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – சிறிதளவு
பூண்டு – 8 பற்கள்
ஊறவைத்த புளி
தண்ணீர்

சிக்கன் நெய் ரோஸ்ட்

நெய் – 6 மேசைக்கரண்டி
ஊறவைத்த சிக்கன்
அரைத்த மசாலா விழுது
தண்ணீர்
வெல்லம் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை

செய்முறை:
சிக்கன்’னை ஊறவைக்க
1. பாத்திரத்தில், சிக்கன், எலுமிச்சைபழச்சாறு, தயிர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசையவும்.
2. இதை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

மசாலா விழுது அரைக்க:
3. கடாயில், எண்ணெய் இன்றி, மிளகாய், முழு தனியா, சீரகம், சோம்பு, முழு மிளகு, வெந்தயம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
4. வாசனை வந்ததும், ஆறவிட்டு, மிக்ஸியில் போடவும்.
5. இதனுடன், பூண்டு, ஊறவைத்த புளி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, விழுதாக அரைக்கவும்.

சிக்கன் நெய் ரோஸ்ட் செய்ய:
6. அகல பேன்’னில் நெய், ஊறவைத்த சிக்கன் சேர்த்து அதிக தீயில் 10 நிமிடம் கிண்டவும்.
7. சிக்கன் துண்டுகளை எடுத்து வைக்கவும்.
8. பேன்’னில் உள்ள மசாலா நீரை 1 நிமிடம் கொதிக்கவிடவும்
9. இதில் அரைத்த மசாலா விழுது மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
10. இதில் வெல்லம் மற்றும் நெய் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
11. நெய் பிரிய ஆரம்பித்ததும், இதில் எடுத்து வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு, உப்பு சேர்த்து மசாலாவில் ஈரம் வற்றும் வரை, 20 நிமிடம் கிண்டவும்.
12. கடைசியாக இதில் கறிவேப்பில்லை சேர்த்து கிண்டவும்.
13. சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்.

Dear Viewers,

Today we are going to see how to make Prawns Biryani along with Ghee chicken roast. Making of these recipes is very simple and perfect feast for weekend or parties. Preparation method of prawns Biryani is similar to any non veg Biryanis like Chicken Biryani, Mutton Biryani , shrimp Biryani or Fry bit Biryani which involves marinating of prawns followed by cooking of gravy and finally making yummy prawns Biryani. Preparation method of Ghee chicken roast is also very simple quick and easy recipe which involves marinating the chicken followed by frying, making of sauce with lot of ghee and masalas and finally frying the tasty chicken Ghee roast. Hope you try this Yummy recipe at your home and enjoy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK –https://www.facebook.com/homecookingt
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking

A Ventuno Production : https://www.ventunotech.com/


Rated 5.00

Date Published 2022-04-22 09:00:17
Likes 544
Views 34934
Duration 13:1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss! random posts ..